Tuesday, August 18, 2015

அய்யா காரைக்குடி இராம சுப்பையா 100 வது பிறந்த நாள் விழாவில் படிக்கப் பட்ட கவிதை

சுப்பையா  என்று பெற்றோர் வைத்த பெயர் முதல் அடையாளம்
அரிமளத்தில்  இருந்து காரைக்குடிக்கு பிள்ளை வந்தது (சுவீகாரம்)
செட்டிநாட்டு  மரபின் அடையாளம்
பிள்ளை வந்த வீட்டில் மைத்துனர் சொ .முருகப்பர் தொடர்பு
மாற்றத்தின் அடையாளம்
பெரியாரின் சொற்பொழிவு பொது வாழ்க்கைக்கு மடை மாற்றிய
மாபெரும் அடையாளம்
பாவேந்தர் பாரதிதாசனொடு கொண்ட நட்பும்
குறள்  கழகம் நடத்தி ஆற்றிய பணிகளும் தமிழ்க் காதலுக்கு அடையாளம்
சமதர்ம இல்லம் என்கிற பெயர் சமதர்ம உள்ளத்துக்கு அடையாளம்
பெரியார் சொன்னதைப்போல் கடவுளை மறந்தார்கள்
அடுத்த வரியில் அவரே சொன்னதைப் போல்
மனிதனை நினைத்தார்கள்
மனிதனை நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான்
பெரியார் கடவுளை மற என்று சொன்னார்
இறுதி வரை அவர்கள் வாழ்க்கை அப்படியே இருந்தது
அது மாறாத கொள்கை உறுதிக்கு அடையாளம் 

No comments:

Post a Comment