Wednesday, August 19, 2015

எஸ்.பி .சுவாமிநாதன்

மாமா ,
ஆர்வோவுக்காக எல்லாம் செய்தீர்கள்
ஆர்வோ உங்களுக்கு
ஒன்றும் செய்யவில்லை
ஆனாலும் நீங்கள்
அதுபற்றிக் கவலைப்படவில்லை

சமதர்ம இல்ல வீட்டைக்
கட்டி  முடித்து
விரைவில்  குடியேறுங்கள்
சமதர்ம இல்ல  முகனூலில்
தங்கள்  தமிழ்ப்புலமை 
அருமையாக  இருக்கிறது
அது  தொடரட்டும்
என்சார்பிலும்  மீனா சார்பிலும்
பிறந்தநாள்  வாழ்த்துக்கள் 


தங்களுடைய 50வது பிறந்தநாளில்
-----------------------------------------------------------------
நான் படித்த கவிதை
------------------------------------

உண்மையான வயதைச் சொல்லி
உங்களுக்குக் கொஞ்சம்
நரை பூசியிருக்கிறார்கள்

நீங்களோ
மாப்பிள்ளைகள் வந்த பின்பும்
மாப்பிள்ளை போல் விளங்கும்
மார்க்கண்டேயர்’ ; ஐம்பதிலும்
உலகம் சுற்றும் வாலிபர்

நம் குடும்பத்தில் திரைப்படம் எடுத்தால்
நட்சத்திர வேடம் யாருக்குப் போனாலும்
நகைச்சுவை வேடம் உங்களுக்குத்தான்

படிப்பில் நீங்கள் இந்தியா போல்
வெண்கலம் மட்டுமே பெற்றதால்
ஆர்வோஒரு தங்கம் வென்றது

சென்னை என்கிற வான்வெளியில்
என்னை இறக்கிவிட்ட
விண்கலம் நீங்கள்

படித்திணைக்கு இடமிருந்தால் அதைச் சென்னையிலே
குடித்தனத்துக்கே கொடுப்பார்கள் என்றார் பாவேந்தர்
படித்திணைக்கும் இடமில்லாத அசோகநகர்
குடித்தனத்தில் அத்தையும் நீங்களும் நான்
படிப்பதற்கு இடம் தந்தீர்கள்

எங்கள் கைகோர்க்கும் படலத்திலோ
ஆச்சிக்கும் அண்ணனுக்கும்
தூதுவர் நீங்கள்

உங்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்
என்று நான் சிந்தித்தேன் -
வாழ்த்துச் சொல்லலாம் ;
வணக்கம் தரலாம் ;
வளர்ந்த பாசமும்
அன்பு கலந்த பக்தியும் உண்டு;
எல்லாம் கலந்தே கொடுக்கிறேன்
தங்களுக்குப்  பிடிக்கும் என்பதால்
காக்டெயில்
தங்களுக்குப்  பிடிக்கும் என்பதால்



5 comments:

  1. கவிதை மிகவும் அருமை. சாமி சித்தப்பாவிற்கு அழகான பிறந்தநாள் வாழ்த்து இது.

    ReplyDelete
  2. அப்பாவைப் பற்றியும், சாமி அண்ணன், ராமுவைப் பற்றியும் எழுதியுள்ள கவிதைகளைப் படித்தேன்.

                           "சாமி மாமா 

                            படிப்பில் வெண்கலம் வென்றதால் 

                            ஆர்வோவுக்குத் தங்கம் கிடைத்தது!"

    அடடா...அழகிய முரண், அரிய  கவிதை! 

    -- 

    அன்புடன்

    சுப.வீரபாண்டியன் 

    ReplyDelete
  3. super kavithai for swamy mama. relished

    ReplyDelete