Thursday, December 15, 2016

தந்தை பெரியார் வசன கவிதை - மொழி ஞாயிறு

                   
 பாவாணரின் இயற்பெயர் தேவநேயன்  என்பதாகும் 
அவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 
ஞானமுத்தன் -பரிபூரணம் இணையருக்கு பத்தாவது
கடைக்குட்டி நான்காவது மகன்  ஆவார்
ஐந்தாம் அகவையில் தந்தையை இழக்கிறார்
அடுத்து தாயையும் இழக்கிறார்  அவர்
மூத்த உடன்பிறந்தவர்களின் அரவணைப்பில்
வளர்க்கிறார் பள்ளி படிப்பை  சோழபுரத்தில் 
மற்றும்  ஆம்பூரில் முடிக்கிறார்  பதினோராம்
வகுப்போ பாளையங்கோட்டையில் படிக்கிறார்
பதினேழாம் வயதில் ஆறாம் வகுப்பு ஆசிரியராக
வாழ்க்கையை தொடங்குகிறார்  கவி புனையும்
ஆற்றலும் இருக்கிறது தேவநேயருக்கு பாளையங்கோட்டை
தமிழாசிரியர் மாசிலாமணியார் தேவநேயக் கவிவாணன்
என்றழைக்கிறார் கவிவாணன் என்பதே தனித்தமிழில்
பாவாணன் என்றாகியது பிற்காலத்தில்
மதுரை தமிழ் சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி
வெற்றி பெறும் ஒரே மாணவர் பாவாணர்
சென்னை திருவல்லிக்கேணியில் கெல்லட்
உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப்
பணி .  பின்னர் சென்னை கிறித்தவக் கல்லூரி
உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி
1926ல் திருநெல்வேலி  தென்னிந்திய   தமிழ்ச் சங்கம்
நடத்திய புலவர்தேர்வில் வெற்றிபெறும்
ஒரே மாணவர் பாவாணர் தான்
1928ல் மன்னார்குடியில் பின்லே கல்லூரி
உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர்
மனைவி எஸ்தர் மறைகிறார்  கைக்  குழந்தையை
விட்டு  விட்டு .  1930ல் அக்கை  மகள் நேசமணி
அம்மையாரை திருமணம் செய்து கொள்கிறார்
19031ல் செந்தமிழ்ச் செல்வியில் பாவாணரின் ,
மொழியாராய்ச்சி( comparative   philology ) என்னும்கட்டுரை
வெளிவருகிறது  முதன் முதலாக
ஆண் மகவு பிறக்கிறது நச்சினார்க்கினிய
நம்பி என்று பெயர் சூட்டுகிறார்
1934ல் திருச்சி பிஷப் ஈபர் கல்லூரி உயர்
நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக
பொறுப்பை ஏற்றார் . 1936ல் 'கட்டுரைவரைவியல் '
என்னும் நூல்வெளிவருகிறது  சொந்த வெளியீடாய்
1937 ஆம்  ஆண்டு ' கட்டாய இந்திக் கல்விக்
கண்டனம்-செந்தமிழ்க் காஞ்சி ' என்னும்
இசைப்பானூல் வெளிவருகிறது  தேசாபிமானத்
தமிழ்த் தொண்டன் என்கிற புனை பெயரில்
1939 ல் பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்  என்று
பெயர் சூட்டப்பெற்ற குழந்தை மறைகிறது
 1940 ஆம் ஆண்டு 'ஒப்பியன் மொழிநூல் '
சொந்த  வெளியீடாக வெளி வருகிறது அதில்
1. பார்ப்பனரைத் தமிழர் வென்ற வகை
2. பார்ப்பனர் தமிழரை வென்ற வகை
3 பார்ப்பனர் மதி நுட்பம் உடையவர்
4ஆரியத்தால் தமிழ் கெட்ட மை.
5 ஆரியர் தொல்லகம்
6.தமிழ் நாட்டில்  பார்ப்பனர்ஐ வகை நிலை
7.கடைக் கழகக் காலப் பார்ப்பனர்நிலை
8.பார்ப்பார்,அய்யர் ,அந்தணர் என்னும் பெயர்கள்  
9 தமிழகத்தில்  இருசார் பார்ப்பனர்
10..பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்
11  இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே
12. பார்ப்பனர் மதி நுட்பம் உடையவர்எனல்
13. ஆரியத்தால் தமிழர்  கெட்டமை
14வடசொற் கலப்பினால் தமிழுக்கு  நேர்ந்த தீங்குகள்
15.ஆரியத்தால் தமிழர் கெட்டமை
16 .ஆரிய தமிழப்போர் தொன்று தொட்டாதல்
17 பார்ப்பனர்  தமிழ்நூற்கன்றி தமிழ் மொழிக்கு அதிகாரிகளாகாமை
18.பார்ப்பனர்களின் ' ' கர ஒலிப்புத் தவறு 
என்று பட்டியலிடுகிறார்  பாவாணர்
இந்நூலின்  பயன் கருதி தந்தை பெரியார்
போற்றினார் பாவாணரை மகிழ்ந்து
சேலம் தமிழ்ப் பேரவை பெரியார் கையால்
பாவாணருக்கு 'திராவிடமொழிநூல் ஞாயிறு '
என்னும் பட்டடத்தை வழங்கியது
"தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்த பின்னும்
துளங்காது துலங்கு பகுத்தறிவுத் தொண்டால்
நன்னூற்றை தாண்டவரும் நோற்றலாற்றின்
நானிலத்துப் பெரியாரை வாழ்த்துவமே "
என்கிற வெண்பாவை பாவாணர் இயற்றுகிறார்
பெரியாரின் 94 வது வயதில் வாழ்த்தி
மொழி ஆய்வில் பாவாணர் போல் வேறு யார்
உளார் என்று பாராட்டுகிறார் பாவேந்தர்
"தமிழில்  தமிழ் சார்ந்த கன்னடம் தெலுங்கில்
அமை கேரளம் துளுவில் ஆர்வம் கமழ்கின்ற
ஆங்கிலத்தில் எனை அயல் மொழியில் வல்லுநர் எப்
பாங்கில் உளார் பாவாணர் போல் "
பாவாணர் பெரியார் நடத்தும் சாதி ஒழிப்பு
மாநாடுகளில் கலந்துகொள்கிறார் களிப்போடு
"பஃருளி நாட்டில் பிறந்தவனாம்
பகுத்தறிவுப் பண்பில் சிறந்தவனாம் "
என்று பாடுகிறார் பாவாணர் பகுத்தறிவோடு
1943 சென்னை மண்ணடி முத்தியாலுப்பேட்டை
உயர்நிலைப் பள்ளியில் தமிழசசிரியராகப் பொறுப்பேற்றார்
சென்னையில்  சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
நடதத்திய முதலாம் தமிழுணர்ச்சி மாநாட்டில்
உரையாற்றுகிறார்  பாவாணர் உவகையோடு
'சுட்டுவிளக்கம்  அல்லது வேர்ச்சொல் ஐந்து '
என்கிற நூல் வெளியாகிறது
1944சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத்
தமிழாசிரியராக அமர்த்தப் பெறுகிறார்'
திராவிடத் தாய் 'வெளியாகிறது சொந்த வெளியீடாக
1949  சேலம் கல்லூரியில் துரை மாணிக்கம்
(தனித்தமிழ் இயக்க முன்னோடி பாவலரேறு
பெருஞ்சித்திரனார் ) பயின்றார் பாவாணரிடம்
'சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் ' நூல் வெளியாகிறது
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார்
பாவாணர் சொல்லாராய்ச்சித் துறையில்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்  என்று
சான்று வழங்குகிறார் மகிழ்ந்து
1952 தமிழில் முதுகலை (எம் ஏ ) பட்டம்  பெறுகிறார்
'பழந்தமிழாட்சி ' நூல் வெளியாகிறது
1953 முதல் தாய் மொழி அல்லது தமிழாக்க விளக்கம் '
வெளியாகிறது தமிழர்களுக்காக
1954  'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் ' வெளியாகிறது
A critical survey of Madras University Lexicon
என்கிற ஆங்கில நூலை வெளியிட்டார் பாவாணர்
பின்னர் 'சென்னைப் பல்கலைக் கழக அகராதியின்
சீர்கேடுகள் ' என்று தமிழிலும் வெளியிட்டார்
1956  அண்ணாமலைப் பல்கலையில் 'திராவிட
மொழியாராய்ச்சித் துறை  வாசகராக பணி
ஏற்கிறார் பாவாணர் .  அங்கே துறையின்
தலைவராக வங்காளப் பார்ப்பனர் சுனித் குமார்
சட்டர்சீ இருக்கிறார் . இருவருக்கும் கருத்து மோதல்
ஏற்படுகிறது . பணி விலகுகிறார் பாவாணர்
1959 பாவலரேறு பெருஞ்சித்திரனார் தனித்தமிழ்
தொண்டிற்காக இதழொன்று தொடங்குகிறார்
அதற்குத்' தென்மொழி' என்று பெயர் சூட்டுகிறார்
பாவாணர் தமிழ் வளர்க்க வேண்டி 
1960 ஆட்சித் துறைக் கலைச்சொல்லாக்கம்
குறித்துப் பாராட்டி தமிழ் நாடு அரசு செப்புப்
பட்டயம் வழங்கி  சிறப்பிக்கிறது
பாவாணரின் துணைவி நேசமணி அம்மையார்
மறைகிறார்கள்  தனிமையில் விட்டு விட்டு
பாவாணர் வருவாய்இன்றி இருப்பதால்
பாவலரேறு அவர்கள் தென்மொழியில்
 'பாவாணர் பொருட்கொடைத் திட்டம் '
அறிவித்து தமிழன்பர்கள் உதவிட
வழி வகுத்தார்கள் பாராட்டும்படி
1964 மதுரைத் தமிழ் காப்புக் கழகம்
'தமிழ்ப் பெருங்காவலர் ' என்னும்
பட்டம் வழங்கியது பாவாணருக்கு
1966     THE  PRIMARY CLASSICAL LANGUAGE OF THE WORLD                                                         
என்னும் ஆங்கில நூல்
முக்கூடல்  சொக்கலால் ராம் (சேட்டு) அவர்களின்
பொருட் கொடையால் வெளியிடப்பட்டது  இது
தமிழ் செம்மொழி ஆவதற்குக் காரணியமாக
இருந்தது என்று கலைஞர் குறிப்பிடுகிறார்
செம்மொழி பற்றிய அவருடைய நூலில்
' பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்'
'இசைத்தமிழ்க் கலம்பகம் 'என்ற நூல்கள்
சொந்த வெளியீடாக வெளி வந்தன
1967 மதுரைத்தமிழ் எழுத்தாளர் மன்றம்
பாவாணரின் மணிவிழாவைக் கொண்டாடியது
'மொழிநூல் மூதறிஞர் ' என்னும் பட்டமும்
ரூ 7352 பொற்கிழியும் வழங்கியது
THE LANGUAGE PROBLEMS OF TAMILNAD AND ITS LOGICAL SOLUTIONS
என்னும் நூல் வெளிவந்தது ; சொந்த வெளியீடு
துறையூரில் பாவாணர் நூல் வெளியீட்டுக்குழு
ரூ 4001 பொற்கிழி வழங்கியது  ;அதில்
'தமிழ் வரலாறு ',  'வடமொழி வரலாறு '
ஆகிய  நூல்கள்  வெளியிடப்பட்டன
1968 திருச்சியில் உலகத் தமிழ்க் கழகம் தொடங்கப்
பெற்றது பாவாணர் அதன் தலைவரானார்
' இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் '
மற்றும் 'வண்ணனை மொழிநூலார் வழுவியல் '



ஆகிய சொந்த வெளியீடுகள் வெளிவந்தன
சென்னையில் பெரியார் தென்மொழிக் கல்லூரி
தொடங்கி அங்கே தமிழையும் பதினெண் திராவிட
மொழிகளையும் தமிழ் வாயிலாகவும் ஆங்கில
தொடங்கி அங்கே தமிழையும் பதினெண் திராவிட
மொழிகளையும் தமிழ் வாயிலாகவும்
ஆங்கில வாயிலாகவும் சிறப்பாகக்
கற்பிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் பாவாணர்
பெரியார் அதனை நிறைவேற்றவில்லை
நீலமலை பெரும்பகல்லாவில் தங்கி
ஒரு மாதம் மலை வாணர் வழக்காற்றுச்சொற்களை
திரட்டினார் பாவாணர் ஆய்வு நோக்குடன்
உ .த .க முதல் மாநாடு பறம்புக் குடியில்
நடந்தது அதில் பாவாணரின்' திருக்குறள்
தமிழ் மரபுரை ' வெளியிடப் பட்டது
சொந்த வெளியீடு தான் அதுவும்
'இசையரங்கு இன்னிசைக்கோவை'
'தமிழ் கடன் கொண்டு தழைக்குமா'
ஆகிய நூல்கள் முகவை மாவட்ட
உ .த .க வெளியீடுகள் ஆம்
1970  கருநாடகத் தமிழர்களுக்குப் பாதுகாப்புக்
கோரி அம் மாநில முதல்வருக்கு கடிதம்எழுதினார்
நெய்வேலியில்' பாவாணர் தமிழ்க் குடும்பம் '
என்ற அமைப்பு தா .அன்புவாணன் -வெற்றிச்செல்வி
இணையரால் ஏற்படுத்தப்பட்டது
உ .த க  மாதிகையாக 'முதன் மொழி'
பாவாணர் சிறப்பாசிரியர் ஆனார்
1971  பறம்பு மலையில் குன்றக்குடிஅடிகளார் தலைமையில்
நடந்த பாரிவிழாவில் பாவாணருக்கு' செந்தமிழ் ஞாயிறு '
பட்டம் வழங்கி முதல்வர் கலைஞர் சிறப்பித்தார்
தென்மொழியின் 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலித் திட்டம் 'வகுக்கப்பெற்றது 
200  தமிழன்பர் கள் ஒவ்வொருவரும் மதம் ரூ 10
அனுப்புவது   என்றும்  அதில் பாதி உருவாக்கச் செலவுக்கும்
மீதி வெளீயீட்டுச் செலவுக்கும் ஒதுக்கப் பட்டது
பாவாணருக்கு தனித்தமிழ் அன்பர்கள் பணம்
அனுப்பி வந்தனர் நிறைவேறும் நிலையில்
இந்த நிலையில் அன்றைய முதல்வர் கலைஞர்
திட்டத்தினை அரசு சார்பில் ஏற்றுக் கொண்டு
பாவாணரை அதன் இயக்குனர் ஆக்கினார்பாவாணர் 10 நாட்கள் வால்பாறையில் தங்கி மலை வாணர் வழக்காற்று சொற்களை
திரட்டினார் .  பாவலரேறு உடன் சென்றிருந்தார்
1972 உ த க  தஞ்சை மாநாடு 'தமிழன் பிறந்தகத்
தீர்மானிப்பு  அறைகூவல் 'கருத்தரங்கமாக
இருந்தது பாவாணர் உரையாற்றினார்
'தமிழர்  மதம்', 'தமிழர் வரலாறு' நூல்கள்
சொந்த வெளியீடு அவை
1973' வேர்ச்சொல் கட்டுரைகள் 'நூல் வெளிவந்தது
1978 'மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை '
நேசமணி பதிப்பக வெளியீடு அந்த ஆய்வு நூல்
1979 'செந்தமிழ்ச் செல்வர் ' என்னும் விருது
பாவாணருக்கு வழங்கினார் அன்றைய முதல்வர்
ம கோ இரா (எம் ஜி ஆர் ) அவர்கள்
'தமிழ் இலக்கிய வரலாறு 'நேசமணி பதிப்பக
வெளியீடாக வருகிறது தமிழர்களுக்காக
1980  LEMURIAN  L ANGUAGE AND ITS RAMIFICATIONS-AN EPITOME
என்னும் ஆங்கில நூல் 400 பக்க அளவில்
திட்டமிடப் பட்டிருந்தது . அதன் 52 பக்க
சுருக்க வடிவம் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு  
அயல் நாட்டுப் பேராளர்க்கெனத் தட்டச்சில்
நெய்வேலி உ .த க உருவாக்கம் செய்தது
1981  மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ்
மாநாட்டில் பங்கேற்று 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் '
என்கிற தலைப்பில் ஒன்றே கால் மணி நேரம்
சொற்பொழிவாற்றினார் பாவாணர்
15.1.1981 பாவாணர்  மறைந்தார் தமிழர்களை
விட்டு  விட்டு மீளாத  துக்கத்தில்
பாவாணரின் கோட்பாடுகள்
1.மாந்தன் தோன்றிய  இடம் ,அழிந்துபோன  குமரிக் கண்டமே
2.மாந்தன் பேசிய முதன் தமிழே ;அதுவே ஞால முதல் மொழி
3.தமிழ் திராவிடத்துக்குத் தாயும் ,ஆரியத்துக்கு மூலமும் ஆகும்
4.தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்பதே
        என் வாழ்க்கைக் குறிக்கோள்
5 இற்றைத் தமிழ் இலக்கியத்திற்கு அணியாய் இருப்பதும்
    தமிழன் தான் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கு
   ஆவணம் போல் உதவுவதும் தொல்காப்பியம் ஒன்றே
இந்தக் குறிக்கோளை / கோட்பாடுகளை  அடைவதற்கு
35 ஆராய்ச்சி நூல்கள் எழுதி இருக்கிறார்பாவாணர்
அதனால் அவரை மொழி ஞாயிறு என்று கொண்டாடுகிறது

தமிழ் உலகம் 

2 comments:

  1. Read ur article. But I feel it's very lenghty. But it's very nice

    ReplyDelete
  2. பாவாணரைப்பற்றிய பயனுள்ள பல செய்திகள் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.தன் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் பாராட்டுகள்.வாழ்த்துகள்.

    ReplyDelete