Thursday, December 8, 2016

தந்தை பெரியார் வசன கவிதை - பெருந்தலைவர்

15. 7.1903 அன்று விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி இணையருக்கு
மகனாகப் பிறந்தார் காமாட்சி  அந்தப் பெயர் பெண் பெயர்
போல் இருப்பதால் காமராசன் என்று மாற்றிக் கொண்டார்
தந்தை 6 வயது இருக்கும்போது இறந்து விடுகிறார்
அம்மா போராடி வளர்க்கிறார் காமராசனை  
பள்ளிப்படிப்பை முடித்து உயர்நிலைப் பள்ளியில்
சேர்கிறார் படிப்பைத் தொடர இயலவில்லை
மாமாவின் துணிக்கடையில் வேலை பார்க்கிறார்
திரு வி க , வரதராஜுலு நாயுடு போன்றோர் பேச்சைக்
கேட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்
சத்திய மூர்த்தியைத் தன் குரு என்கிறார்
உப்பு சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்
அலிப்பூர்  சிறை உட்பட பல சிறைகளில் இருக்கிறார்
9 ஆண்டுகள் சிறைவாசம் இருக்கிறார்
1953ல்  ராஜாஜி குலக்கல்வித் திட்டம் கொண்டு வருகிறார்
மக்கள் எதிர்க்கிறார்கள்  பெரியார் எதிர்க்கிறார் காங்கிரஸ்
கட்சியிலும் எதிர்ப்பு வருகிறது ராஜாஜி பதவி விலகுகிறார்
முதல்வர் பதவிக்கு சி சுப்ரமணியம் போட்டியிடுகிறார்
அவரை எதிர்த்து போட்டியிட்ட காமராசர்  பெரும்பான்மை
சட்ட மன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று
தமிழக முதல்வர் ஆகிறார் தமிழர்களைக் காப்பாற்ற

தொழில் வளம் பெருக்க திருச்சியில் பி. ஹச்.. எல்
கொண்டுவந்து சாதனை படைத்தார்.      தமிழ் நாட்டில்
உள்ள அணைகள் அவர் பெயர்  சொல்லும்
மேட்டூர் கால்வாய்திட்டம் , பாவனி அணை , அமராவதி அணை ,
சாத்தனூர்  அணை  ,வைகை  அணை எல்லாம் கட்டினார்
மூன்றுமுறை முதல்வர் என்றபோதும்
அவர் வாடகை வீட்டில் குடியிருந்தார்
அவருடைய சொத்து புத்தகங்கள், 2 வேட்டி
2 சட்டை ரூ 150 பணம் அவ்வளவுதான்  
இப்படிப்பட்ட பெருந்தலைவரை தமிழ்நாட்டில் ,
இந்தியாவில்  ஏன் உலகத்திலேயே பார்க்க  முடியாது
திருமணம் செய்து கொள்ளவில்லை
நாட்டையே குடும்பமாக நினைத்தார்
காமராசர் எனும் கல்வி வள்ளல்

பச்சைத்  தமிழர் காமராசர் ஆட்சியைக் காப்பாற்ற
வேண்டும் உள்ளாட்சித் தேர்தலிலும்  அவர் கட்சியையே
ஆதரிக்க வேண்டும் என்கிறார் பெரியார் ஆர்வத்தோடு
ஆனாலும் சென்னை மாநகராட்சியை  திமுக  கைப்பற்றுகிறது
தமிழகத்தில் தமிழும் மத்தியில் ஆங்கிலமும்
தொடரும் என்று தான் கூறி விட்டதாகவும்
அதை தலைமை அமைச்சர் நேரு ஏற்றுக்  கொண்டு
விட்டதாகவும் 1960 ஆகஸ்ட் காமராசர் கூறுகிறார் 
திருச்சி நகராட்சியில் காமராசர் படத்தைத் திறந்து
வைத்து பெரியார் சொல்கிறார் அவர் செயற்கரிய செய்யும்
கர்மவீரர் என்றும் 26000 பள்ளிகள் 304 உயர்நிலைப் பள்ளிகள்
57 கல்லூரிகளை நிறுவியவர் என்றும் பாராட்டுகிறார்
தமிழன் உருப்பட வேண்டுமானால் காமராசர் ஆட்சி
மேலும் 10  ஆண்டுகளுக்கு  தொடர வேண்டும்  என்றார்
பெரியார்  அக்கறையோடு நினைத்து
19.2.1961 அன்று காமராசருக்கு  சட்டமன்ற
வளாகத்தில் சிலை எடுக்க வேண்டும் என்றார்  பெரியார்


காமராசரை ஆதரிப்பது ஏன் என்றொரு புத்தகம்
எழுதி வெளியிட்டார்  பெரியார்
இன்றைய காமராசர் ஆட்சி பச்சை நீதியை
அடிப்படையாக வைத்து வருணாசிரமக்
கோட்டையை கல்வித் துறையில் தகர்த்து
வருகிறது  என்றார்  பெரியார்

முதியோர் உதவித் தொகை பெற 70 வயது
என்று இருந்து வந்தது அதை 60 வயது என்று
விரிவாக்கினார் பெருந்தலைவர்  நல்  மனதோடு
காமராசர் ஆட்சி சாதி ஒழிப்புக்கு சாதகமாயிருக்கிறது
எனவே இன்னும் 5 ஆண்டுகளுக்கு வாக்களியுங்கள்
காமராசரின் ஆட்சி தமிழர்களின் பொற்காலம்
படிப்போர் எண்ணிக்கை பெருகியிருக்கிறது
உயர் நிலைப்   பள்ளி   வரையில்
இலவசக் கல்வி  மதிய உணவு
15% இருந்தது  இப்போது 37%ஆகியிருக்கிறது
தொடக்க கல்வி கட்டாயமாகி
உள்ளது கல்விக்கான நிதி 1946-47ல் 6.59 கோடி
1963-64ல்28.70 கோடியாய் கூடியுள்ளது
என்று புள்ளிவிவரம் வெளியானது விடுதலையில்
இந்தியைத் தடுக்க முடியாவிட்டால்
பதவி துறப்பேன் என்று வீர முழக்கமிட்டார்
முதல்வர் காமராசர் .7.7.1963 அன்று பெரியார்
போடி தொகுதியில் பரப்புரை செய்தார்..       காமராசர்
ஆட்சி தொடர்ந்தால் தமிழர்கள் நூற்றுக்கு நூறு
பேரும் படித்து விடலாம் என்றார் உறுதியோடு
காமராசர் திட்டம் கொண்டுவரப் பட்டது
அதன்படி பதவியில் இருக்கும் மூத்த தலைவர்கள்
பதவி விலகி கட்சிப்பணியில் ஈடுபடுவது வேண்டும்   
காமராசர் பதவி விலக நினைத்தார் அப்போது
பெரியார் ஒரு தந்தி அனுப்பினார்
" தாங்களாகவோ பிறர் அறிவித்த கருத்துக்கு  இசையவோ
முதலமைச்சர் பொறுப்பு நீங்குதல் தமிழர்கட்கும்
தமிழ் நாட்டுக்கும் தங்களுக்கும் தற்கொலைக்கொப்பானதாகும் "
காமராசர் பெரியாரின் அறிவுரையைக் கேட்கவில்லை
பதவி துறந்தார் பிறர் பின்னிய வலையில்
காமராசர் அகில இந்தியக் காங்கிரசின் தலைவர்
ஆனார் . தலைமை அமைச்சர்களை உருவாக்குபவர்
(கிங் மேக்கர் ) என்றழைக்கப்பட்டார்  9.10.63 அன்று
தலைமை அமைச்சர் நேரு பெருந்தலைவர் சிலையை
திறந்து வைத்தார் . காமராசர் பேசும்போது
கிருபானந்த வாரியாரின் காலட்சேபம் நாடெங்கும்
நடைபெற வேண்டும் என்கிறார் பெரியார்
அது தன் கொள்கைக்கு எதிராக இருப்பதால்
அதை கண்டிக்கிறார் சினத்தோடு
காமராசர் தலைமை அமைச்சர்  பதவிக்கு இந்திரா காந்தியை
ஆதரிக்கிறார் பெரியார் யாராக இருந்தாலும் பரவாயில்லை
என்று சொல்கிறார்  பெரியாரால்  பச்சைத் தமிழர் என்று பாரட்டப் பட்ட
காமராசர் அகில இந்திய அரசியலில் இணையற்ற
செல்வாக்குப் பெற்றவராக விளங்கிடுகிறார் நேரு காலத்தில்
கிடைத்த காங்கிரஸ் தலைமைப் பதவி சாஸ்திரி காலத்திலும்  
இந்திரா காலத்திலும் நீடித்தது தலைமை அமைச்சர்களையே
உருவாக்கும் வல்லமை படைத்தவராக பார்ப்பனரல்லாத
தமிழர் உயர்ந்திருப்பதை பார்ப்பனர்கள் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை  என்பது உண்மை
பசு வதை தடைச்சட்டம் வேண்டும் என்று
இந்துத்துவா அமைப்பினர் சொன்னபோது அப்படிச்
சட்டம் தேவையில்லை என்றார் பெருந்தலைவர்
 7.11.66      இந்துத்துவா அமைப்பினர் தூண்டிவிட்டுக் காலிகள்
பெருந்தலைவர் தில்லி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது
நாற்புறமும் தாக்கி நெருப்பும் வைத்து விட்டனர்

கொல்லைப்புற வழியாக தப்பிக்க திமுக  தோழர்
கோதண்டபாணி உதவினார் நல் மனதோடு  
திருச்சியில் 17.9. 1967 அன்று பெரியாரின் முழு
உருவச்சிலையை (நின்று கொண்டிருக்கும் தோற்றம் )
பெருந்தலைவர் திறந்து வைத்தார்
பெருந்தலைவர் தேர்தலில் நாகர்கோவிலில் வென்றதும்
பெரியார் தலையங்கம் தீட்டினார்  பாராட்டி
வெள்ளைக்காரன் போன பிறகு காங்கிரஸ் பார்ப்பனர்கள்
கைக்கு வந்தது ; அவர்கள் எவ்வளவு வேண்டியும் நெருங்காமலிருந்து
பார்ப்பனரை பதவியிலிருந்து  வெளியேற்றினேன் பிறகு பதவிக்கு
வந்த பார்ப்பனரல்லாத தமிழர் காமராசர் அவர் விரும்பியதற்கு
இணங்க அவரை ஆதரித்தேன்  என்கிறார் தந்தை பெரியார் 
அப்படிப்பட்ட பச்சைத்தமிழர்
தலைமை அமைச்சர் இந்திராகாந்தி நெருக்கடி நிலை
கொண்டுவந்ததால் மனம் நொந்தார்  உடலும்
நலிந்தது 1975 ஆம் ஆண்டு காந்தி  பிறந்த  நாளில்
அக்டோபர் 2ல்  மறைந்தார் மக்களை விட்டு விட்டு
கலைஞர் அமைத்தார் அவருக்கு நினைவகம்
காந்தி மண்டபம் அருகில்    கடற்கரைச் சாலைக்கும்

காமராசர் பெயர் சூட்டப்பட்டது அன்போடு

No comments:

Post a Comment