Sunday, September 18, 2016

தந்தை பெரியார் கவிதைகள் - திரு.வி .க

திருவாரூர்  விருதாச்சல கல்யாணசுந்தரம்
திரு.வி.க  என்றே அழைக்கப்பட்டார்
கற்றார்  தமிழ்  மறைமலை அடிகளிடமும்
யாழ்ப்பாணம் கதிர்வேல் பிள்ளையிடமும்

தொடங்கினார் தொழிற்சங்கம் 1918 ல்
நவசக்தி வார ஏட்டை தோற்றுவித்தார் 1920 ல்
நாணயமிக்கவர்; கிடையாது
சொந்த வீடு கூட.  எழுதினார் நூல்கள்
50 க்கும்  மேல் அவற்றுள்
பெண்ணின் பெருமை,முருகன் அல்லது அழகு ,
மனித  வாழ்க்கையும் காந்தியடிகளும்
சிறந்தன .  இருந்தார் அவர் 1926 ல்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக

ஆற்றினார்  பணி ஆசிரியராக
வெஸ்லி கல்லூரியில் சில ஆண்டுகள்


தமிழ்  உலகம் போற்றியது
திரு .வி.க வைத் தமிழ்த் தென்றல் என்று

பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
சிறை  சென்ற போது
9.12.1938 அன்று திரு. வி.க. எழுதினார்
தலையங்கம் நவசக்தி யில்
"சிறப்பறவை யாகிய இராமசாமி நாயக்கர்
வரலாற்றை விரித்துக்கூற வேண்டியதில்லை.
அவர்தம் வரலாற்றில் அறியக் கிடக்கும் 
நுட்பங்கள் பல உண்டு .அவற்றில் சிறப்பாகக் '
குறிக்கத் தக்கன, இடையறா ச்சேவை ,
சமத்துவ நோக்கம்,சுதந்திரஉணர்ச்சி ,நட்புரிமை ,
தாட்சண்யமின்மை ,உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசாமை ,அஞ்சாமை ,ஊக்கம்
சோர்வின்மை, சலிப்பின்மை,எடுத்த வினையை
முடிக்கும் திறன் ,கரவு -சூழ்ச்சியின்மை முதலியன .
இவை அவர்தம் வாழ்வாக அரும்பி ,மலர்ந்து ,காய்த்து ,
கனிந்து நிற்கின்றன .இந்நீர்மைகள் திரு.நாயக்கரை
அடிக்கடி சிறை புகச் செய்கின்றன போலும்
இது காட்டுகிறது திரு.வி.க.வின் அழகிய
உரைநடையையும் பெரியார் பற்றிய
அவரின் உயர்ந்த எண்ணத்தையும்.

திரு.வி.க..60 அகவையை அடைந்தபோது
அமைக்கப் பட்டது மணிவிழாக் கழகம்
பெரியார் எழுதினார் துணைத் தலையங்கம்
விடுதலையில் அதை வரவேற்று.
மணி விழா நாளன்று வெளியிட்டார் பெரியார்
விடுதலை முதல் பக்கத்தில் திரு.வி.க.வாழ்க்கை
வரலாற்றையும் ஆற்று மணலினும் அதிகநாள் வாழ்க
என்ற தலையங்கத்தையும்
அன்றைய விடுதலையை திரு.வி.க. மணி  மலர்
என்று பெயரிட்டு பெருமைப் படுத்தினார் பெரியார்.

திரு.வி.க  சூட்டினார் வைக்கம் வீரர் என்கிற பட்டத்தைப்
பெரியாருக்கு திரு.வி.கசொன்னார் எனக்குப்
பெண்டு ,பிள்ளைகள் இல்லை ,நான் செத்துப் போனால்
எனக்காக ஆளுகின்ற ஒரு நண்பர் இருந்தால்  அது
பெரியாராகத்தான் இருக்க முடியும் இந்த நாட்டில்
நல்ல செயல்கள் செய்தவர் பெரியார் ஒருவர்தான்

எங்கள் இருவருக்கும் தொழிலாளர் பிரச்சினையில்
எந்த வேற்றுமையும் இல்லை என்றார்.

1948ல் திராவிடர் கழகம் கொண்டாடியது
பொங்கல்  விழா வ. உ .சிதம்பரனார் பந்தலில்
நான் முதலில் தமிழன்,பிறகு இந்தியன் மூன்றாவதாக
உலகத்தவன் என்றார் திரு.வி.க.
 
எழுச்சி உரை ஆற்றினார் திரு.வி.க.
வ .உ .சி  படத்தை திறந்து வைத்து
மதுரை மாவட்ட முதலாவது தி.க. மாநாட்டில்

மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்ற
இந்தி எதிர்ப்பமாநாட்டில் எழுச்சியுரை
ஆற்றினார் திரு.வி.க.பெரியார் ,அண்ணா
பாவேந்தர் ஆகியோருடன்

22.8.1948 அன்று நடைபெற்றது இந்தி
எதிர்ப்புக் கூட்டம் திரு.வி.க.தலைமையில்
லட்சம் பேர் கலந்து கொண்டனர் .


15.1.1949 மற்றும் 16.1.1949 ஆகிய நாட்களில்
நடைபெற்றது திருக்குறள் மாநாடு சென்னையில்
பெரியார் விடுத்தார் வேண்டுகோள்
திரு.வி.க. கலந்து கொண்டு உரையாற்றினார்.

22.3.1949 அன்று பெரியார் உரையாற்றினார்
திருவள்ளுவர் உள்ளம் பற்றி பச்சையப்பன்
கல்லூரியில் திரு.வி..க. தலைமையில்   


1 comment: