Friday, September 23, 2016

தந்தை பெரியார் கவிதை - கலைவாணர்

நாகர்கோவில் சுடலைமுத்து கிருட்டிணன்
பெற்றார் புகழ் கலைவாணராக
வில்லுப்பாட்டு,நாடகம் ,திரைப்படம்
என எல்லாவற்றிலும் பதித்தார் முத்திரை
சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும்
உரியன வசனங்களும் பாடல்களும்
நடித்தார் 150 படங்களுக்கு மேல்
சிவகவி, ராஜாராணி ,மணமகள்  போன்ற படங்கள்
சேர்த்தன புகழ் அவருக்கு பொருளும் சேர்ந்தது
ஆனார் வாரிக் கொடுக்கும் வள்ளலாக
மணந்தார் நடிகை மதுரத்தை

கலைஞர் கட்டினார் கலைவாணர் அரங்கம் சென்னையில்
நடைபெற்றது கலைவாணரின் கிந்தனார்
இசை  நிகழ்ச்சி 3.9.1944 அன்று
ஈரோட்டில் திராவிடர்கழகக் கட்டிடம் கட்டுவதற்காக
பெரியார்  புகழ்ந்தார்  கிருட்டிணன் ஒரு மேதாவி ,வள்ளல் ,
பொது நலத்திற்கு உதவுபவர் ,புரட்சியாளர் என்று
அணிவித்தார் பொற்சங்கிலியும் பதக்கமும்
வழங்கினார் தனியாக ஒரு பொன் பதக்கம்

1.11.1944ல் பெரியார் சென்றார் கிருட்டிணன்
குழுவினர் நடித்த இழந்த காதல் நாடகத்துக்கு
நாடக ரசபாவங்களை விளக்கிய பெரியார்
நாடகப் புரட்சி பற்றிய வரலாறு எழுதப் படும்
போது கிருட்டிணன் படம் அட்டைப் பக்கத்தில்
இருக்க வேண்டும் என்றார் 

பொறாமைக்காரர்கள்  பின்னினர் சதிவலை
கிருட்டிணனையும் எம். கே. தியாகராஜ பாகவதரையும்
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்க வைக்க
பெற்றனர்  வெற்றி செய்யாத குற்றத்திற்கு ஆயுள்
தண்டனை வாங்கிக் கொடுப்பதில்

பெரியார் சென்றார் சிறைக்கு
கொடுத்தார் ரூபாய் 10000 வழக்குச்செலவுக்கு
3.11.1945 ல்  குடிஅரசு இதழில் எழுதினார்
தலையங்கம் 14 வருட கடுங்காவல்
விதிக்கப்பட்ட போது அய்யோ கிருட்டிணா
உனக்கா இந்த கதி என்று

பெரியார் எழுதினார் துணைத் தலையங்கம்
10.11.1945ல் கிருட்டிணன்-பாகவதர் விடுதலை
முயற்சிக்கு ஒவ்வொருவரும் ஒரு ரூபாய்
வீதம்  ரூபாய் 50000 திரட்ட வேண்டும்  என்று
நாடெங்கும் நடத்தப் பட்டன கூட்டங்கள்
அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும்
தீர்மானங்களை நிறைவேற்றி
கிருட்டிணன்-பாகவதரை விடுதலை செய்ய
வேண்டுமென்று

பெரியார் தலையங்கம் 15.6.1946 விடுதலை  இதழில்
கிருட்டிணன்,பாகவதர் பிணையல் மனுப்  போட வேண்டும்
அரசு அதைக் கவனிக்க வேண்டும் கருணைக் கண்களுடன் என்று
விடுதலை  இதழ் தலையங்கம் 25.4.1947 அன்று
கிருட்டிணன் -பாகவதர் விடுதலை
உண்மை பெற்றது வெற்றி என்று

கலைவாணர் கலந்து கொண்டார்  15.1.1949 அன்று
பெரியார் சென்னையில் நடத்திய திருக்குறள்  மாநாட்டில் 


பட்டுக்கோட்டை அழகிரி குடும்பத்துக்கு
நிதி அளிப்பு விழா நடைபெற்றது தஞ்சையில்
அண்ணா தலைமையில் 29.5.1949 அன்று
அழகிரி குடும்பக் கடனோ ரூபாய் 6000
ஆனால் வசூலானதோ 3500 ரூபாய் மட்டுமே
கலைவாணர் வழங்கினார் 6000 ரூபாய்
தன் சொந்தப் பொறுப்பிலிருந்து 2500 ரூபாய்
சேர்த்து விழாவில் ,பாவேந்தர், கலைஞர் போன்றோர்
கலந்து கொண்டனர்  

   

No comments:

Post a Comment