Friday, February 3, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - மறைமலை அடிகள்

15.7.1876 நாகையில் சொக்கநாதர் -சின்னம்மாள்
இணையருக்கு மகனாகப் பிறந்தார் வேதாசலம்
பள்ளிப் படிப்பு நாகப்பட்டணத்தில்
தந்தை மறைந்து விடுவதால் பள்ளிப்
படிப்பு பாதியில் நிற்கிறது வேதாசலத்துக்கு
கிறித்தவப் பள்ளியில் படித்ததால்
இளமையிலேயே ஆங்கிலப் புலமை
இருக்கிறது அவருக்கு
சமற்கிருதம் கற்க விரும்புகிறார் பார்ப்பனரல்லாதவராக
இருப்பதால் ஆசிரியர் கற்பிக்க மறுக்கிறார்
பார்ப்பன நண்பன் மூலம் கற்றுக் கொள்கிறார்
சமற்கிருதம் மெல்ல மெல்ல
தமிழ் நாராயணபிள்ளையிடம் கற்கிறார்
சைவ  தத்துவம் சோமசுந்தர நாயக்கரிடம்
மானோன்மணியம் சுந்தரம் பிள்ளையிடம் தமிழ்
நாடகம் கற்றுத் தேர்கிறார் வேதாச்சலம் 
தமிழாசிரியர் பணி கிடைக்கிறது திருவனந்தையில்
17ஆம் வயதில் சௌந்தரவள்ளி திருமணம் செய்து
கொண்டு இல்லறம் ஏற்கிறார் அவர் 
சித்தாந்த தீபிகை இதழில் துணை ஆசிரியர்
அதை விடுத்து சென்னை கிறித்தவக் கல்லூரியில் பணி
வி .ஜி .சூரியநாராயண சாஸ்திரிகளிடம்
சைவம் பற்றி அறிந்து கொள்கிறார்
சைவம் பற்றி தமிழகம் முழுவதும் சொற்பொழிவாற்றுகிறார்
' சைவ சித்தாந்த      மகா சமாஜம் ' ஏற்படுத்துகிறார்
1910 தமிழ் விருப்பமொழிதான் என்றும் ஆங்கிலம்
பயிற்று மொழியாக  இருக்கும் என்றும் சென்னைப்
பல்கலைக்கழகம் விதி இயற்றுகிறது  தமிழ்
பயிற்றும் வாய்ப்புகள்  குறைகின்றன 
தமிழில் ஆய்வு மேற்கொள்கிறார் நல்ல சொற்பொழிவாளர் 
காளிதாசனின் சாகுந்தலத்தை தமிழாக்கம் செய்கிறார்
1916ல் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்குகிறார்
சுவாமி வேதாச்சலம் என்ற தன் பெயரை மறைமலை
அடிகள் என்றும் 'ஞான சாகரம் ' என்ற தன் இதழை
'அறிவுக்கடல் ' என்றும் மாற்றிக் கொள்கிறார் 'முல்லைப்பாட்டு ஆராய்ச்சி ' , தொலைவில் உணர்தல் ',
'மரணத்தின் பின் மனிதன் நிலை ', '100 ஆண்டு உயிர் வாழ்வது '      உள்ளிட்ட 100 நூல்களை இயற்றியுள்ளார்
அவருடைய திருமகள் நீலாம்பிகை தனித் தமிழ்
உணர்வுகளுக்கு உதவியாக இருந்தார்கள் அவர்கள் தலைமையில் நடை பெற்ற மகளிர் மாநாட்டில்தான்
ஈ வெ ரா அவர்களுக்கு பெரியார் பட்டம் கொடுத்தார்கள் பெருமையோடு தன் இறுதி நாட்களை சென்னைக்கு அருகே பல்லாவரத்தில் கழித்தார்கள் 15.9. 1950ல் மறைந்தார்கள் 74 வயதில் 
அவர்கள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கததுக்கு 2016ஆம்
ஆண்டு நூறாவது ஆண்டு அவர் வழியில் ஞா .தேவநேயப்
பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்த்திரனார் போன்றவர்களும் தொடர்ந்து உழைத்திருக்கிறார்கள் தனித்தமிழுக்காக   முனைப்போடு
மறைமலை அடிகள் இந்தி எதிர்ப்பாளரும்கூட
"இந்தி பொது மொழி தகுதி உடையதன்று;இந்தி நுழைப்பால்
தமிழ் கெடும்; தமிழர் துன்புறுவர் " என்று  எழுதினார்  பெரியார் சுவாமி வேதாசலம் தமிழ்நாட்டில் தமிழ்
மக்களின் நாகரிக விஷயமாய்த் தக்க ஆராய்ச்சி
உடையவர் என்று சொல்கிறார் 
நீலாம்பிகை அம்மையார் திருமணத்தின்போது
குருக்கள் பார்ப்பனர் அவரை வைத்து திருமணம்
செய்யலாமா என்ற கேள்விஎழுந்தது . அடிகள்
குருக்கள் பார்ப்பனரல்லர் ஆதி சைவர் என்றும்
அவர் கொள்கைக்கு முரணல்ல என்றார்
பெரியார் ஏற்கவில்லை அவ்விளக்கத்தை
17.7.1948 அன்று சென்னை அரண்மனைக்காரன் தெரு
செயின்ட் மேரி மண்டபத்தில் சென்னை மாகாண
இந்தி எதிர்ப்பு மாநாடு மறைமலை அடிகள்
தலைமையில் நடைபெற்றது  சிறப்போடு
தந்தை பெரியார் ,திரு வி க ,அண்ணா ,பாரதிதாசன் ,
மபொசி, நாரண துரைக்கண்ணன் ஆகியோர் கலந்து
கொண்டு எழுச்சியுரை ஆற்றினர்


No comments:

Post a Comment