Thursday, February 23, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - பாவலரேறு

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின்
இயற்பெயர் துரை மாணிக்கம் பெற்றோர்
துரைசாமி-குஞ்சம்மாள் இணையர்
10.3.1933ல் சேலம் அருகில் சமுத்திரம்
என்னும் சிற்றூரில் பிறந்தார்கள்
பள்ளிக் கல்வி சேலம் -ஆத்தூர்
கல்லூரிப் படிப்போ சேலம் நகராண்மைக் கல்லூரி
அங்கே சில ஆண்டுகள் தேவநேயப் பாவாணர்
அவர்களிடம் படிக்கிறார் சிறப்பாக
தாமரை அம்மையாரை திருமணம் செய்து கொள்கிறார்
நடுவண் அரசின் அஞ்சல் துறையில் பணி செய்கிறார்
முதலில் புதுவையிலும் பிறகு கடலூரிலும்
பணி செய்கிறார் பண்போடு
மறைமலை அடிகள் ,தேவநேயப் பாவாணர்
என்கிற வரிசையில் தனித்தமிழ் இயக்கம்
வளர்க்கிறார் 'தென்மொழி ' இதழ் தொடங்கி
பாவேந்தரின் நட்பும் இருக்கிறது அவருக்கு
தன்னுடைய முதல் கவிதை நூலுக்கு பாவேந்தரின்
அணிந்துரை வாங்குகிறார் அன்போடு

கொய்யாக்கனி , ஐயை ,ஆரியப் பார்ப்பனரின்
அளவிறந்த கொட்டங்கள் ,பாவாணர் ,சாதி ஒழிப்பு 
திருக்குறள் மெய்ப்பொருளுரை உள்ளிட்ட
37 நூல்களை தனித்தமிழில் இயற்றியிருக்கிறார்
எழுதுவது மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட
பாவாணரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு
சேர்த்தார் பாவலரேறு கடமையாக
பாவாணர் காட்டுப் பாடியில் தங்கி வருவாய்
இன்றி இருந்தபோது பாவாணர் பொருட்கொடைத்திட்டம்
ஏற்படுத்தினார் தென்மொழி அன்பர்கள் மூலம்
பாவாணரின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித்
திட்டம் செயல்படாமல் இருந்தபோது பாவாணருக்கு
காத்திருக்க வயதில்லை என்று கருதி தென்மொழி  செந்தமிழ் சொற்பிறப்பியல்அகரமுதலித் திட்டம் ஏற்படுத்தினார்  இருநூறு தனித்தமிழ் அன்பர்களைச் சேர்த்து
திட்டம் வெற்றி கரமாக ஆன நிலையில் அதைக்
கலைஞர்  எடுத்துக் கொண்டார் அரசு சார்பில்
பெருஞ்சித்திரனார் தமிழறிஞர் மட்டுமல்ல போராளியும்
கூட இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாடு பிரிவினை
போராட்டம் நடத்தியிருக்கிறார் சிறப்பொடு
அவர் மதுரையில் நடத்திய முதல்பிரிவினை
மாநாட்டை தந்தை பெரியார் தொடங்கி வைத்தார்
பாவலரேறு பெரியார் பற்றியும் நூலொன்று
எழுதியிருக்கிறார் .  அதில் அவரைப் பாராட்டுவதைப்
பார்ப்போம் முதலில்ஈராயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் கூறிய சீர்திருத்த இலக்கணத்துக்கு 
இலக்கிய,மாய்இருந்தவர் பெரியார்    என்கிறார் 
பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர் ஒரு
இனத்தின் தலைவர் ஒரு காலத்தின் தலைவர்
அவர் பேசிய பேச்சை சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது
அவர் சுற்றிய தொலைவை அலெக்சாண்டரும் சுற்றியிருக்க முடியாது  அவர் நெப்போலியனைவிடப் போரிட்டவர்
இலெனினைவிட பொதுமக்களை நேருக்கு நேர் கண்டு பேசியவர் அவரால்தான் தொண்டு என்னும் சொல்லுக்குரிய முழுப்  பொருளையும் உருவாக்கி காட்ட முடிந்தது
இத்தனை பாராட்டுகிற பெருஞ்சித்திரனார்
பெரியார் மீது வருத்தங்கள் இல்லாமலும் இல்லை
காமராசர் ஒருவர்க்காக அக்கட்சியில் உள்ள
தீயவர்களையும் ஆதரித்தாரே எக்கிறார்
அதற்கான கரணியங்களை பெருந்தலைவர்
பகுதியில்  பார்த்தோம்
பெரியார் திராவிடநாடு திராவிடருக்கே என்றாரே
தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லாமல் என்கிறார்
இதற்கான விடையை மூவர் என்கிற தலைப்பில் பார்ப்போம்பெரியார் தமிழில் என்ன இருக்கிறது என்கிறாரே
என்கிறார் பாவலரேறு அதற்கான விடையை
தமிழ் என்கிறபகுதியில்  பார்த்தோம்
பாவலரேறு மட்டுமல்ல குடும்பமே தமிழ்க் குடும்பம்
தாமரை அம்மையாரும் போராளி தான்
1. மகள் பொற்கொடி 25 ஆண்டுகள் தமிழ் வழிக்  கல்விப் பள்ளி நடத்துகிறார்  200 பேருக்கு இலவயக் கல்வியும் உண்டு
2.மருமகன் இறைக்குருவனார்    15 ஆண்டுகள் தென்மொழியை பார்த்துக் கொண்டார் 15 நூல்களும் எழுதியிருக்கிறார்
3. மகன் முனைவர் பூங்குன்றன்    செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி பதிப்பாசிரியர் தஞ்சை தமிழ்ப் பல்கலையில் அறிவியல் களஞ்சியம் பதிப்பாசிரியர் தென்மொழியை' பார்த்துக் கொள்கிறார்
4. மருமகள் கயற்கண்ணி தொலைபேசித் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள்
5 மகள்  தேன்மொழி தழல் ஏடு நடத்துகின்றார் 
-6. மருமகன்  பேரா அருளியார் தஞ்சை தமிழ்ப் பல்கலையில் சொல்லாய்வு செய்தவர் அருங்கலை சொல்  அகராதி ஏற்படுத்தியவர் அயற்சொல் அகராதி உட்பட 10 நூல்கள்  எழுதியவர்
7. மகள் செந் தாழை: செவ்விந்தியப் பிள்ளைகளுக்கு பள்ளி அரிசோனாவில் 
8.  மருமகன் முனைவர் ஆறிறைவன்  அறிவியல் அறிஞர் அரிசோனாவில்
மகன் பொழிலன் : ஈழப் போராட்டத்தில் 10 ஆண்டுகள்  சிறை. 7 நூல்கள் எழுதியிருக்கிறார் 'தமிழ் நிலம்' ஏடு நடத்துகிறார்
10. மருமகள் அரசி: இல்லத்தரசி
11. மகள் பிறைநுதல் 'மாணவர் களம்மாத இதழ் நடத்துகிறார்
12. -மருமகன் முனைவர் குணத்தொகையன்: பள்ளிக்கல்வித்துறையில் பணி செய்தவர் . ஈழ[ப் போராட்டத்தால் பணி விலகல்.   எஸ் ஆர் எம் பல்கலையின் தமிழ்ப் பேராயத்தில் இருக்கிறார் 
எல்லோரும் தனித் தமிழ்த் தொண்டர்கள் போராளிகள்
தமிழக்களம்  என்கிற அமைப்பையும் தென்மொழி  பதிப்பகத்தினையும் நடத்துகின்றனர்  பாவலரேறுஅவர்கள் 11.6.1995 அன்று மறைந்தார்கள் சில ஆண்டுகள் ,முன் தாமரை அம்மையாரும் மறைந்தார்கள்
பெற்றோர் மறைந்த பின்னும் பிள்ளைகள்
அதே உணர்வோடிருப்பதும் அய்யாவின் நூல்களை
வெளியிட்டுத் தொண்டுசெய்வதும் அரிது 

No comments:

Post a Comment