Thursday, March 16, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - தமிழர்கள்

இராஜாஜி பார்ப்பனர்கள் முன்னேற்றத்துக்குப்
பாடுபட்டார் பெரியார் பார்ப்பனரல்லாதார் (தமிழர்கள்)  
முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார் குமாரசாமி ராஜா சென்னை மாநில முதல்வராக வந்தார் பெரியார்
ஒரு பார்ப்பனர் வரவில்லையே என்று மகிழ்ந்தார்
8.10.50 ல் வட நாட்டார் துணிக்கடை , உணவகங்களின்
முன் மறியல் செய்வதென்று தீர்மானித்தார்                                          
சர்தார் வல்லபாய் படேல் பெரியார் கோரிய
முதல் அரசியல் சட்டத் திருத்தத்துக்கு
உதவியாக இருந்த பார்ப்பனரல்லாதார்
தமிழர்கள் தொழிலாளர்கள் கூலி உயர்வு
கேட்பதில் உடன்பாடில்லை அவர்கள் இலாபத்தில்
பங்கு கேட்க வேண்டும் என்பதேஅவர் கொள்கை
அண்ணாமலைப்பல்கலையில் சர் சி பி ராமசாமி
அய்யர் துணைவேந்தர் ஆவதை கண்டித்தார் பெரியார்
குன்றக்குடி அடிகளாரை புரட்சித் துறவி என்றழைத்தார்
தமிழர்களைக் கத்தி வைத்துக்கொள்ளச் சொன்னார் தாக்குவதற்காக  அல்ல தற்காப்புக்காக
வெள்ளைக்காரன் நம்மைத் தொட விடுகிறான்
ஆனால் பார்ப்பான் நாம் தொட்டால் தீட்டு என்கிறான்
கோவில் அர்ச்சனைகள் வட மொழியில் இல்லாமல்
தமிழில் இருக்க வேண்டும் என்ற அடிகளாரின் கோரிக்கையை 28.6.54 அன்று விடுதலையில் வரவேற்றார் பெரியார்  காமராசர் ஆட்சி தாழ்த்தப்பட்டோரை அறங்காவலர்
குழுவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று விதி செய்தது
அதை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று
கலைஞர் ஆட்சியில் திருத்தம் செய்யப்பட்டது  
அரசாங்கத்தின் முக்கியபதவிகளை தலைமை
செயலாளர்  தலைமை பொறியாளர் காவல்துறை அதிகாரிகளை எடுத்டுத் துக்  கொண்டால் மலையாளிகளே இருக்கிறார்கள்.       27.3.55 அன்று பெரியார் பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்கு சென்றார் அங்கே சூத்ரர்கள் இடம் என்று போட்டிருந்தது பெரியார் நகராட்சிக்கு 
விண்ணப்பித்து அதை அகற்றும்படி கூறினார்
தட்சிணப் பிரதேசம் வந்தால் தமிழர்களுக்கு ஆபத்து
என்றார் பெரியார் கரணியத்தோடு
சென்னை ராஜ்யம் என்று பெயர் தந்திருக்கிறார்கள்
தமிழ்நாடு என்று தராமல் என்கிறார்
தமிழகத்தில் பெரிய பதவிகளில் தமிழர்களையே
நியமிக்கும்படி  அமைச்சர்களை கேட்டுக் கொண்டார் 
பட்டப்  படிப்பைவிட அனுபவப் படிப்பே சிறந்தது 
வட நாட்டில் இராவணனை கொளுத்துவது போல்
தென்னாட்டில் இராமனை கொளுத்த வேண்டும்
13.6.56 அன்று மதுரையில் டி கே எஸ் சகோதரர்களின்
'இராஜராஜ சோழன் ' நாடகத்தை பெரியாரும் குன்றக்குடி
அடிகளாரும் பார்த்து வாழ்த்தினார்கள்
5000 தோழர்கள் தூக்குமேடை ஏறத் தயாராயிருந்தால்
திராவிடநாடு தானே வரும்  என்றார் 
நாம் பெற்ற அரும்செல்வம் தந்தை பெரியார்
என்றார் குன்றக்குடி அடிகளார்
ஆதி திராவிடத் தோழர்களின் கோவில் நுழைவு ,தெரு நுழைவு
போராட்டங்களில் முதன்முதல் சிறைசென்ற எங்களையா
சந்தேகப் படுவது இன்றைக்கு ஆதி திராவிட மக்கள்
படித்தவர்களாகவும் பதவி பெற்றும் சட்டசபை
உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் ஆனார்கள்
என்றால் அது பார்ப்பனர்களாலா ? இதற்கெல்லாம்
நன்றி காட்டாவிட்டாலும் பரவாயில்லை . ஆனால்
விரோதம் பாராட்டலாமா  என்கிறார் பெரியார்
தமிழ் நாட்டில் தமிழ்தான் ஆட்சிமொழி என்ற
சட்டம் 27.12.556 அன்று நிறைவேறியது கண்டு
மனம் மகிழ்ந்தார் பெரியார்
தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில்
கடவுள்களுக்கு தமிழில் பூசை செய்யப்பட வேண்டும்
அதேபோல் தமிழன் பூசை செய்ய வேண்டும்
என்று வலியுறுத்தினார் பெரியார்
சென்னை உயர்நீதி மன்றத்தில் பெரியார் வழக்காட
வில்லை  அதற்கு மாறாக ஒரு மணி நேரம் ஒரு
அறிக்கையை படித்தார் அது 128 பக்கங்களில் 
'நீதி கெட்டது யாரால் ' என்ற புத்தகமாக வந்துள்ளது
சிலர் தங்களை வைசியர் என்றும் சத்திரியர்
என்றும் அழைத்துக்கொண்டாலும் பார்ப்பனர்
இவர்களை சூத்திரர் என்றே அழைப்பர்   
காங்கிரஸ் இயக்கத்தில் வரதராஜுலு நாயுடு
அவரை விடக் குறைவாக உழைத்தவர்கள்
இளையவர்கள் உயர்ந்த அளவு கூட உயரவில்லை
கரணியம் அவர் பார்ப்பனரல்லாதார் -தமிழர் என்பதே
தமிழ் வடமொழியை விட இந்தியை விட சிறந்தது
என்பதிலும் பயன்மிக்கது என்பதிலும் அய்யமில்லை
திரு அழகிரிசாமி அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது
செல்லாது என சில பார்ப்பனர்கள் தடை வாங்கினர்
அந்த வழக்கு   தோல்வியில் முடிந்தது  பெரியார் கண்டித்தார்  பின்நாளில் அழகிரிசாமி உயர்நீதி மன்ற நீதிபதி ஆகி பிறகு உச்ச நீதி மன்ற நீதிபதியுமானார்
1964 ஆம் ஆண்டு திருச்சியில் வே ..ஆனைமுத்து  தலைவராக இருந்து பகுத்தறிவுப் பிரச்சார படை ஒன்றை 30 நாட்களில் உருவாக்க பயிற்சி கொடுப்பார் என்று அறிவித்தார் பெரியார் 
கும்பக் கட்டுப்பாடு இயற்கைக்கு மாறானது என்ற
இராஜாஜியின் பிற்போக்கு வாதத்தை சாடினார் பெரியார்
தி.மு.க. தலைவர்கள் பகுத்தறிவு வாதிகள் . பெரியாரின்
கொள்கைகளான சாதி ஒழிப்பு ,வகுப்பு வாரி உரிமை 
ஆகியவற்றில் உடன்பாடு உடையவர்கள்
16.2.69 அன்று பேசும்போது உயர் நீதி மன்றத்தில்
அப்போதுள்ள 16 பேரில் 10 பேர் தமிழர்கள் என்று
பூரிப்படைகிறார் பெரியார்
தி மு க ஆட்சி ஒவ்வொரு கையெழுத்துப் போடும்போதும்
அந்த ஆள் பார்ப்பானா தமிழனா என்று பார்த்துப்  போட வேண்டும்
தி மு க  ஆட்சியில் அமைச்சர்கள் 13 பெரும் தமிழர்கள்
உயர் நீதி மன்ற நீதிபதிகளில் 18 பேரில் 14 பேர் பார்ப்பனர்
அல்லாதார்  ஆக இருக்கின்றனர்
வட நாட்டில் உள்ள காசி,பூரி,பண்டரிபுரம் முதலிய
ஊர்களில் உள்ள பிரபல கோவில்களில் பக்தர்கள்
பூசை செய்யலாம் கருவறைக்குள் யாரும் போகலாம்
தமிழ்நாட்டில் தான் இந்து மதம் ,ஆகமம் என்று
சொல்லிக் கொண்டு வேற்றுமை காட்டுகிறார்கள்
குன்றக்குடி ஆதீனத்தை சேர்ந்த கோவில்களில் திசம்பர்
24 முதல் கருவறைக்குள் யாரும் போகலாம் என்று
ஆதீன கர்த்தரான அடிகளார் அறிவித்தது பெரியாருக்கு
பெரிய வெற்றி ஆகும்
'உண்மை ' மாத இதழ் ஆண்டு சந்தா 3 ரூ 
கடவுள் புரட்டு ,மதப் புரட்டு ,சமுதாய இயல்
புரட்டு ,தேசியப் புரட்டு ,புராண இதிகாசப் புரட்டு ,
சாஸ்திரப் புரட்டு  இவைகளை விளக்கிடும்
பகுத்தறிவு இதழ் எல்லோரும் சந்தாதாரர் ஆகுங்கள்
என்றார் பெரியார்  6000 பேர் உடனே சேர்ந்தனர்
'உண்மை' நாத்திக இதழ் சாக்ரடீஸ் நாத்திகர்
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்  நாத்திகர் ,பெர்நனார்ட்ஷா
நாத்திகர் , ஏசுநாதர் நாத்திகர் ,முகமது நபிகளும்
நாத்திகரே . பவுத்தர்களும் சமணர்களும் நாத்திகர்களே
திருச்சியிலுள்ள கிறித்தவ  இடுகாட்டில்  தாழ்த்தப் பட்டோருக்கு தனி இடம் இருந்தது அதை சுவர் எழுப்பி பிரித்து  இருந்தார்கள்    20.6.70 ல் பெரியார் அது கிறித்தவ மதத்துக்கே இழிவு.  இடையிலுள்ள சுவரை உடைத்தெறியுங்கள் அல்லது இந்துவாக மாறி விடுவதாக மிரட்டுங்கள் என்று வழி காட்டினார் வாஞ்சையோடு
28.6.70 அன்று வெள்ளாள வகுப்பை சேர்ந்த ஆசிரியர் ஏ .கே .ரகுபதி நரிக்குரவப் பெண்ணை கலப்பு திருமணஞ் செய்து கொண்டார்
உயர்நீதி மன்றத்தில் தாழ்த்தப்பட்டோர் ஒருவர் கூட
நீதிபதியாக  நியமிக்கப்படவில்லை என்றார் பெரியார்
என்  ஜி ஜி ஓ  களின்  இரகசியக் குறிப்புமுறை  ஒழிக்கப்
படும்    என்ற  நல்ல செய்தி கிடைத்தது
6.9.70 அன்று சென்னையில் முதன் முதலில் 
பகுத்தறிவாளர் கழகம் துவங்கப் பட்டது
சி டி நடராசன் தலைமையில் நன்றாக
திசம்பர் 1970 பழனியில் அர்ச்சகர் பயிற்சி
பள்ளி துவங்கப்பட்டும் என அமைச்சர் கே வி
சுப்பைய அறிவித்தார்                               
7.6.71 முதல் பிற்படுத்தப் பட்டோருக்கு 31 விழுக்காடும்
தாழ்த்தப் பட்டோருக்கு 18 விழுக்காடும் பதவிகளை
கணக்கிடுமாறு அரசாணை பிறப்பிக்கப் பட்டது
பெரியார் மகிழ்ந்தார்
25.1.72ல் தேவி திரையரங்க உரிமையாளர் வேண்டியதற்கு
இணங்க பெரியாரும் மணியம்மையாரும் சுற்றிப் பார்த்து
வெளி நாட்டை ஒப்ப நம் தமிழர் ஒருவர் அமைத்திருக்கிறார்
என்று பாராட்டினார்கள் மனமுவந்து
22.2,72 அன்று ஈழத் தமிழர் தலைவர் செல்வநாயகம்
பெரியாரை சந்தித்தார் சென்னையில் பெரியாருக்கு
ஈழத் தமிழர்களிடமும் அக்கறை இருந்தது 
உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்வைதற்கு
நுழைவுத் தேர்வு கொண்டுவர அரசு முடிவு செய்தது
பெரியார் இது பார்பனீயத்தின் சதி என்று கண்டித்தார்
கர்நாடக மாநிலத்தில் ஒரு மாணவன் குடுமி வைத்துக்
கொள்ள மறுத்ததால் அவனுக்கு மாணவர் உணவு
விடுதியில் அனுமதி கிடைக்கவில்லை . சட்டமன்றத்தில்
எஸ்.எம்.சந்திரசேகர் 23.7.72 அன்று கர்நாடகத்திலும்
ஒரு பெரியார் பிறக்க வேண்டும் என்று முழங்கினார்
திருநெல்வேலியில் திருவைகுண்டம் நகரில்
நான்கு புறமும் மதில்களால் சூழப்பட்ட பகுதி
ஒன்றுள்ளது அதில் கோட்டைப் பிள்ளைமார்
என்ற வகுப்பார் வெளி உலகைப் பாராமலே
வாழ்ந்து வந்தனர் அந்தப் பழக்கத்தை 8.2.73
அன்று பெரியார் உடைத்தெறிந்தார்
அதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த சமூகத்தினர்
பெரியாருக்கு பாளையம்கோட்டையில் பெரிய
விருந்தொன்று கொடுத்தனர் 
17.10.72 அன்று நீதிபதி அழகிரிசாமி உச்ச நீதி மன்ற
நீதிபதி ஆண முதல் தமிழர் அவருக்கு முன் தமிழ்
தெரிந்த ஐந்து பார்ப்பன நீதிபதிகள் இருந்தார்கள்
அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில்
வளர்ந்த ரா.நிர்மலா அங்கேயே ஆசிரியப் பணி புரியும்
பெண் ரா .அலமேலு இல்லத்தில் 12 ஆண்டுகள் வளர்ந்த
பெண் இருவரும் திருமணமாகி போகும்போது பெரியார்
கண் கலங்கினார் பாசத்தோடு
சேரன் போக்குவரத்துக் கழகம் முதலீட்டிலும் நிர்வாகத்திலும்
தொழிலாளர்களுக்கு பங்கு அளித்த திட்டத்தை தமிழக அரசின் சரித்திர சாதனை என்றார் பெரியார்
பெண்கள் 22 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ள
வேண்டும்  ஒரு வேலை பார்த்து சொந்தக் காலில் நிற்க
வேண்டும் அவரவர்களே மாப்பிள்ளை தேடிக் கொள்ள
வேண்டும் என்றார் பெரியார் அக்கறையோடு
ம கோ இரா (எம் ஜி ஆர் ) அ தி மு க  அம்மைச்சரவையில்
கே எம் சுப்ரமணியம் ஹண்டே என்று இரு பார்ப்பனர்கள்
இருந்தார்கள் என்று வருத்தப் பட்டார் பெரியார்  
தமிழ்நாடு பொது பணிகள் ஆணையம் வெளியிட்ட
குரூப் 1 முடிவுகளில் சாதி முறையில் சக்கிலியர் ,
பள்ளர் ,வண்ணார் ,மருத்துவர் போன்ற வர்களும்
உள்ளனர் என்று மகிழ்ந்தார் பெரியார் 
பார்ப்பனரல்லாதார் எவ்வளவு கோடீஸ்வரர் ஆனாலும்
சமூக அந்தஸ்தில் கீழ்தான்  பார்ப்பனர் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் சமூக அந்தஸ்தில் மேல்தான் .அதனால் தான்
பார்ப்பனர்கள் பொருளாதார சமத்துவத்தை வரவேற்கிறார்கள்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
திருச்சியில் ஆற்றிவரும் கல்விப் பணிகள்
1.பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
2.நாகம்மையார் ஆசிரியைப் பயிற்சி நிறுவனம்
3.பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி
4.பெரியார் நடுநிலைப் பள்ளி
5 நாகம்மையார் குழந்தைகள் இல்லம்
6 பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகம்
7.தந்தை பெரியார் நூற்றாண்டு நர்சரி பள்ளி 
8 ரங்கம்மாள் சிதம்பரம் தையல் பயிற்சி நிறுவனம்
9 பெரியார் -மணியம்மை மன்றம்
  மேலே உள்ள இரு காப்பகங்களிலும் சுமார் 300 குழந்தைகள் உள்ளனர் அவர்களுக்கு வயிறார உணவு நல்ல உடை அரிய கல்வி வழங்கப் படுகிறது
16. 9.73 அன்று மாலை முரசு ஏடு பெரியாரை
பேட்டி கண்டு பதில்களை பெற்றது அதில் சிலவற்றை  
பார்ப்போம்
கே : உங்களுடைய  அரசியல் வாரிசு யார்
; எனக்கு வாரிசு யாரும் கிடையாது ; கொள்கைகளும் கருத்துக்களும் தான்  வாரிசு ;வாரிசு என்பது தானாக ஏற்பட வேண்டும்
கே     உங்களுடைய கொள்கைகள் ,கருத்துக்கள் ,எண்ணங்கள் ,கோட்பாடுகள்
இவைகளைப் பரப்ப ஊர்தோறும் பகுத்தறிவுப் பிரச்சார நிலையங்கள் அமைக்கப் போகிறீர்களா
ப    இதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன .என்னென்ன செய்ய   வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன் .ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில்
விடுதலைப்  போராட்டம் தான் முக்கியமாகத் தெரிகிறது
கே தங்களைப் போல் 95 வயது வரை வாழ்வதற்கு
என்ன செய்ய வேண்டும்
ப  : எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்
   கே:  இந்த வயதிலும் தாங்கள் பல மைல் கள்  சுற்றுப்  பயணம்
         செய்கிறீர்களே உடல் நலம் பாதிக்காதா
ப  : வயதிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை . என்னைப்
     பொறுத்தவரை சும்மா இருக்கப் பிடிக்காது சுற்றுப் பயணம்
      செய்தால்தான் நன்றாக  இருக்கிறது
கே:  மாமிசம் சாப்பிடுவதால் தங்கள் ஜீரண சக்தி  பாதிக்கப்
         படவில்லையா
ப :என்னைப் பொறுத்தவரை    மற்ற உணவுப் பதார்தங்களைவிட
     மாமிசம் சாப்பிட்டால் ஜீரணமாகி விடுகிறது .அதனால் எந்தத்
     தொந்தரவும் கிடையாது  மாமிசம் இல்லாவிட்டால்தான் தொந்தரவு          
கே :  கிளர்ச்சி  போராட்டம் நடத்த வேண்டும் என்கிறீர்களே
          அது எப்படி இருக்கும்
ப : என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம் .. நான்
     அவற்றில் நேரடியாகவே ஈடுபட நினைக்கிறேன் . நான்
      என்ன சொல்கிறேனோ அதை நானே முன்னின்று
     செய்தால்தான் நன்றாக இருக்கும் . ஒதுங்கிக் கொள்வது

     என்பது எனக்குப் பிடிக்காது  

No comments:

Post a Comment