Thursday, March 2, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - இயல்பு

பெரியார் நேரம் தவறாமைக்கு (PUNCTUALITY)                  முதன்மை கொடுப்பார் .எந்த நிகழ்ச்சிக்கு போவதாக
இருந்தாலும் காலம் தாழ்த்த மாட்டார் . குறித்த நேரத்திற்கு
முன்னரே சென்று விடுவார்
எல்லோருக்கும் மரியாதை கொடுப்பார்
அவரை விட இளையவர்களைக் கூட
எழுந்து நின்று வாங்க வாங்க என்று வரவேற்பார்
அமைச்சர்களை இளையவர்களாக இருந்தாலும் பெயர்
சொல்லி அழைக்க மாட்டார் அய்யா என்றழைப்பார்
குன்றக்குடி அடிகளார் 45 வயது இளையவர் ஆனாலும்
மகா சந்நிதானத்திடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்
என்று தான் சொல்லுவார் அவரை கைது செய்ய வரும்
காவல் துறை அதிகாரிகளைக் கூட எழுந்து நின்று
வரவேற்பார்  மரியாதை காட்டி 
வீட்டிலும் எங்கே வெளியே சென்றாலும் தான்
உண்பதற்கு முன் தன்னோடு வந்தவர்கள் பணியாளர்கள்
ஓட்டுனர்கள்  சாப்பிட்டு விட்டார்களா என்று தெரிந்து
கொள்வார்  அக்கறையோடு
அவர் காமராசரிடமும் கலைஞரிடமும் நெருக்கமாக
இருந்தார் ஆகவே பலரும் அவரிடம் பரிந்துரைக்காக   வருவர்
அவர் யாருக்காகவும் பரிந்துரை  செய்ய மாட்டார்
விதிலக்ககாய் ஒரே ஒருவருக்கு மட்டும் பரிந்துரை செய்தார் அவர்தான் சுயமரியாதைக்  குடும்பத்தை
சேர்ந்த  நெ .து .சுந்தரவடிவேலு ஆகும் பள்ளிக் கல்வித் துறை
இயக்குநராகப் போடும்படி பெருந்தலைவர் காமராசரிடமும்
அதில் அரும்பணி ஆற்றியது கண்டு மகிழ்ந்து
சென்னைப் பல்கலைத் துணைவேந்தராகப்  போடும்படி
கலைஞரிடம் இரு முறையும் பரிந்துரைத்தார்
சீனாவில் ஆடவரும் மகளிரும் ஒரே மாதிரியான
ஆடை அணிவது போல் நம் நாட்டிலும் இருக்க  வேண்டும்
என்பது பெரியார் கொள்கை நாகம்மையார் குழந்தைகள்
இல்லத்தில் அதை அமுல் செய்யலாம் என்றார் தோழர்
ஒருவர் அருகில் இருந்த மணியம்மையார் 110 செட் உடைகள்
வேண்டுமே என்றார்கள் ."அம்மாவுக்கா " என்று கேட்டு
நிறுத்திக் கொண்டார் பெரியார் அனைவரும்
கொல்லென்று சிரித்ததும் அம்மாவுக்கு விஷயம்
புரிந்து வெட்கத்துடன் ஓடி விட்டார்கள் உள்ளே
.இது பெரியாரின் நகைச்சுவை உணர்வுக்கு  அடையாளம்
பெரியாருக்கு பொறியியல் ஆற்றலும் இருந்தது
பந்தல்கள் கட்டடங்களுக்கு அவரே கைத்தடியால்
அளவெடுத்துக் கையினால் வரை படங்களை வரைவார்
மதிப்பீடும் (எஸ்டிமேட் )அவரே போட்டுவிடுவார்     
பெரியாரின் உடை இதுதான் 
5 முழ வேட்டி பின்னாட்களில் கைலிஉள்ளே வெள்ளைத்துணியில் அரைக்கைச்
சட்டை அதிலுள்ள   பையில் பர்ஸ் மேலே
முக்கால்கை கருப்புச் சட்டை 1945 முதல்அதன்
பைகளில் நினைவுக் குறிப்பேடு  கண்ணாடிக்கூடு முக்கிய காகிதங்கள்  தடியான பேனா   பின்னாட்களில் ஒரு பெரிய   உருப்பெருக்கி (லென்ஸ்) ஆகியவை.  துடைப்பதற்காக ஒரு துண்டு.  பிரம்புக் கைத்தடி.  குளிர் காலத்தில் ஒரு கம்பளிச் சால்வை
பழையவிளிம்புச்சட்டத்தில்    (ஃ பிரேமில்) அடங்கிய மூக்குக் கண்ணாடி
குளிப்ப தும் துணி மாற்றுவதும்விரும்பிச் செய்வதில்லை
மணியம்மையாரின் தொண்டில் அடங்கும்
பெரியார் மின்கலம் ( BATTERY)   சார்ஜ் ஆவது  போல் செய்யும் தொண்டில் சார்ஜ் ஆகி விடுவார்
பொதுத் தொண்டில் ஈடுபடுவோர் தமது சொந்த மான
அவமானங்களை ஒரு பொருட்டாய் கருதக்கூடாது
என்பது தன்மானத் தந்தை பெரியாரின் கொள்கை
திருக்குறளில் அவர் விரும்புகின்ற குறள்
"குடி செய்வார்க்கு இல்லை பருவம்
மடி செய்து மானம் கருதக் கெடும் ''

இது அவருக்குப்  பொருத்தமான குறளும் கூட  

No comments:

Post a Comment