Friday, February 16, 2018

குறுந்தொகை - பாடல் 65


"வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவந்து உகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாராது உறையுநர் வரசைஇ
வருந்திநொந்து  உறைய இருந்திரோ எனவே"

பாடலின் பொருள் :

தோழி ,பரல் கற்களிடையே நின்ற தெளிந்த நீரைப் பருகிய ஆண் மான்
தான் இன்பமென்று கருதிய பெண் மான் இருக்கும் இடத்திற்கு
வந்து விளையாடி நிற்க மழை தரும் கார் பருவம் வந்தது
தலைவர் உளரோ என்று வந்தது


பாடியவர் கோவூர் கிழார்

1 comment:

  1. வலிய கூழாங்கற்களிலும், மணல் அறலிலும் ஓடும் ஆற்றுநீரைப் பருகிய இரலைமான் தன் பெண் இரலையோடு கூடி இன்பத்துடன் சுழன்று சுழன்று விளையாடும்படி தளிமழை பொழியும் கார்மேகம் வந்து உலாவுகிறது. அவர் இன்னும் மீளவில்லை. வருந்தி நொந்து இருந்தாயா என்று கேட்டு என்னைத் தேற்றுவார் இல்லை. - தலைவி தன் தோழியிடம் இவ்வாறு ஏங்குகிறாள்.

    ReplyDelete