Friday, February 16, 2018

குறுந்தொகை - பாடல் 67


''உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலம்கரி கன்னியங் காடு இறந்தோரே"

பாடலின் பொருள் :

கிளி  வளைவாய்க் கொண்ட வேம்பின் ஒள்ளிய  பழம்
ஒருத்தி புதிய நூலினை ஊடு செலுத்தும் பொருட்டு முனை
மாட்சிமைப் பட்ட வளைந்த உயிர்களிடையே கொண்ட
பொன் அணிகலத்தின் ஒற்றைக் காசினை ஒக்கும்
நிலம் கரிந்துள்ள கள்ளியை உடைய பாலை நிலத்தை
கடந்து   சென்ற தலைவர் நம்மை நினைக்கவும் மாட்டாரோ 

பாடியவர் அள்ளுர் நன்முல்லையார்


2 comments:

  1. கிளி வேப்பம்பழத்தைத் தன் வளைந்த வாயிலே கொண்டுள்ளது. இது ஊசியின் நுனியில் நூலில் கோப்பதற்காகப் பொன் குத்துக்களை வைப்பது போன்று உள்ளதாம். (வேப்பம்பழம் பொன்முத்துக்களுக்கு உவமை)

    ReplyDelete
  2. செய்தி
    வேப்பம்பழம் பழுத்துவிட்டது. (வேனில் காலம் வந்துவிட்டது.) இன்னும் அவர் திரும்பவில்லை என்று சொல்லித் தோழி கலங்குகிறாள்.

    ReplyDelete