Thursday, March 22, 2018

குறுந்தொகை - பாடல் 87

"மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்
கொடியோர்த் தொறூஉம் என்ப;  யாவதும்
கொடியர் அல்லர்எம் குன்றுகெழு நாடர்;
பசைஇய பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று,  தடமென் தோளே "
  

பாடலின் பொருள் :

அம்சம் செய்தலிலே முதிர்ந்த முருகக் கடவுள் ,கொடுமை
செய்தோரை  ஒறுக்கும் என்று அறிந்தோர் கூறுவர்
எம்முடைய மலைகள் பொருந்திய நாட்டை உடைய தலைவர்
சிறிதும் கொடுமைப் பாடுடையவர் அல்லர்
இவ் வேற்றுமை எதனால் எனில் எம் நெற்றி அவர் என்னிடம்
விழைதல் வேண்டிப் பசந்து காட்டுவதாயிற்று
அவர் உள்ளம் நெகிழ்ந்து காட்டுவதாயிற்று எமது பெரிய மெத்தென்ற தோள்கள்


பாடலை பாடியவர் கபிலர்

1 comment:

  1. தலைவனின் பிரிவால் தலைவி வாடுயிருக்கிறாள். அவளது நெற்றியில் பசலை படர்ந்திருக்கிறது. தோள் வளையல் கழலும்படி மெலிந்துபோனதுடன் தானும் துவண்டுபோயிற்று. இந்த நிலைக்குக் காரணம் தலைவனின் பிரிவுதான். உண்மையில் தலைவன் கொடுமைக்காரன்.

    ஊர்மன்றத்தில் மரா மரத்தடியில் குடிகொண்டிருக்கும் அச்சம் தரும் முதிர்ந்த கடவுள் கொடியோரைத் தண்டிக்கும் என்பார்கள். ஒருவேளை, தன் தலைவரை அது தண்டிக்குமோ என்று தலைவி அஞ்சுகிறாள். தன் தலைவர் கொடியவர் அல்லர் என்று அத் தெய்வத்திதிடம் கூறி அவரைத் தண்டித்துவிடாதே என்று வேண்டிக்கொள்கிறாள்.

    தன் மேனியில் நேர்ந்துள்ள மாறுதல்களுக்குக் காரணம் அவர் அல்லர். ஏனோ நெற்றி அதுபாட்டுக்குப் பசந்துவிட்டது. தோள் அதுபாட்டுக்கு வாடிவிட்டது. அவ்வளவுதான் என்று தெய்வத்திடம் சொல்கிறாள்.

    ReplyDelete