Thursday, March 22, 2018

குறுந்தொகை - பாடல் 84

"பெயர்த்தனென்  முயங்க," யான் வியர்த்தனென்" என்றனள்
இனிஅறிந்தேன்,அதுதுனிஆ குதலே 
கழல் தொடி அய் மழை தவழ் பொதியில்  
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண் ணியளே "

பாடலின்  பொருள் :
சுழலும் தொடியினை உடைய ஆய்வல்லது முகில்கள் தவழும்
பொதிய மலையிடத்தே உண்டான வேங்கைப் பூ மணமும்
காந்த ட்பூ மணமும் கமழ்ந்து ஆம்பல் குளிர்ச்சி உடைய மகள்
என்னோடு ஒரு பாயலில் புறம் காட்டிக் கிடந்தாளை தழுவதற் பொருட்டுப்
பெய0ர்த்தேனாக அதற்கு உடன்பட்டாளாய் யான் உடல் வெயர்த்துள்ளேன் 
என்றாள் .அத வாய்மை என்று கொண்டு வாளாவிருந்து யான் vஎன்றாள் .அத வாய்மை என்று கொண்டு வாளாவிருந்து யான்
இப்பொழுது அம்மறுப்பின் காரணம் வெறுப்பு ஆதலை அறிகின்றேன் .
அறிந்தும் என் செய்கின்றேன்

பாடலை பாடியவர் மோசி கீரனார் 


1 comment:

  1. செவிலித்தாய் வயது வந்த தன் மகளை ஆரத் தழுவினாள். அப்போது அவளது மகளின் மேனியில் நறுமணம் கமழ்ந்தது. அந்த மணம் வீரக்கழலை அணிந்த ஆய் அரசனின் மழைமேகங்கள் தவழும் பொதியமலையில் பூத்திருக்கும் வேங்கை மலர் போலவும், காந்தள் மலர் போலவும் இருந்தது. அந்த ஆய் நாட்டுச் சுனையில் பூத்திருக்கும் ஆம்பல் மலர் போல் குளுகுளுவென்று இருந்தது. (இனிக்கட்டுமே என்று எண்ணிக் கையை எடுத்துவிட்டு) மீண்டும் தழுவினேன். அவள் எனக்கு வியர்வை வருகிறது விட்டுவிடு என்றாள். (ஏன் அப்படிச் சொன்னாள் என்பது) இப்போது புரிந்துவிட்டது, நான் அவளைத் தழுவுவதை விரும்பவில்லை என்று.(தன் காதலன் தழுவும்போது கிட்டும் இன்பத்தை நினைத்திருக்கிறாள். அவனைத் தழுவிக்கொண்டு அவனுடன் என்னை விட்டுவிட்டு ஓடிவிடப் போவதை நினைத்திருக்கிறாள்.)

    ReplyDelete