Friday, March 9, 2018

குறுந்தொகை - பாடல் 83

"அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை 
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை, வரும் என் றோளே"

பாடலின் பொருள்

தமக்குரிய இல்லிலிருந்து தாம் ஈட்டிய பொருளை தென்புலத்தார்
முதலியவர்க்குப் பகுத்துண்ண கொடுத்து தமக்குரிய கூற்றை 
உண்டாற்போன்ற இன்பமுடையதும் கிளைகள் தோறும்
இனிய பழங்கள் தூங்கா நின்ற உயர்ந்த மலைகளை உடைய
நாட்டுத் தலைவனை வரைதல் முயற்சியோடு வருவான் என்று
அறிவித்தவள் ஆகிய அன்னை பெறுதற்கு அரிய ஆமிழ்தம்   
பெரும் புகழை உடைய மேனிலை உலகம் பெறுவாளாக

பாடலை பாடியவர் வெண் பூதனார்       


1 comment:

  1. தலைவியைப் பெண் கேட்க வருமாறு தலைவியின் அன்னை தலைவனுக்குச் சொல்லியனுப்பியுள்ளாள். இது கிடைத்தற்கு அரிய அமிழ்தம் பெற்று ஊரெல்லாம் ஒன்றுகூடி உண்பது போல இனித்து உயிரைத் தழைக்கச் செய்கிறது. - இவ்வாறு சொல்லித் தோழி செவிலியை வாழ்த்துகிறாள்.

    திருக்குறள் ஒப்புமை
    இப்பாடலில் வரும் 'தம் இல் தமது உண்டு அன்ன' என்னும் தொடர் 'தம் இல் இருந்து தமது பாத்து உண்டு அற்றால்' எனத் திருக்குளில் வரும் தொடரை நினைவூட்டுகின்றது.

    ReplyDelete