Thursday, May 31, 2018

குறுந்தொகை - பாடல் 350

அம்ம வாழி தோழி முன்னின்று
பனிக்கடுங் குன்றஞ் செல்லா தீம்எனச்  
சொல்லின மாயின் செல்லார் கொல்லோ
ஆற்றயல் இருந்த இருந்தோட்  டஞ்சிறை
நெடுங்காற் கணத்துள் ஆளறி வுறீஇ
யாறுசெல்  வம்பலர் படைதலை பெயர்க்கும் 
மலையுடைக்  கான நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி  னோரே .

பாடலின் பொருள்

தோழி ! வாழி ! ஒன்று சொல்வன் கேட்பாயாக ! பாலை வழியின் பக்கத்திலிருந்த கரிய கொம்பையும் அழகிய சிறகையும் நீண்ட கால்களையும் கொண்ட கண ந்து ள்  என்னும் பறவையானது வழிப்பறி கள்வராம் ஆள்கள் மறைந்து இருப்பதை முன்னதாக அறிவுறுத்தும் .அவ்வாறு முன்கூட்டி அறிவுறுத்தி , அவ்வழியே செல்லும்
வணிகப் பயணிகளின் படைகளை அங்கிருந்து நீங்கி வேறு இடத்திற்கு மாற்றிப் போகச் செய்யும் .அத்தகைய மலைகள் சூழ்ந்த காடுகளைக் கடந்து , நிலை நில்லாதபொருள் வேட்கையால் பிரிந்த தலைவரின் முன் நின்று ,
'பனிக்காலத்தே தாங்க இயலாத  கடுந் துயரடைவோம் ,பிரிந்து செல்லாதீர் ' என முன்பே சொல்லினமாயின் சென்றிருப்பாரோ ?

இப்பாடலை எழுதியவர்  ஆலந்தூர்கிழார்

No comments:

Post a Comment