Friday, January 13, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - சிக்கனம்

பெரியார் சிக்கனக்காரர் அதனால்தான்
அவருடைய தந்தை வெங்கட்ட நாயக்கர்
அவருடைய தமையனார் ஈ வெ கிருட்டிணசாமி
அவர்களிடம் உன் தம்பி இராமனைப் போல்
சிக்கனக் காரனாக இரு என்கிறார் ஆனால்அவரிடம் கஞ்சத்தனம் கிடையாது
அவ்ருடைய சிக்கனத்தைக்கூட புத்தகம்
வாங்குவதில் காட்ட மாட்டார் புதிய
புத்தகம் ஏதும் வந்திருக்கிறது என்று
வீரமணி அவர்களோ உதவியாளர்களோ சொன்னால்
ஒன்றுக்கு இரண்டாக வாங்கி வரச் சொல்லுவார்
சட்டைப்பை யிலிருந்து (purse)
பணம் எடுத்துக் கொடுப்பார்   எல்லா விதமான
புத்தகங்களையும் படிப்பார் பெரியார்
கம்பஇராமாயணம் ,வால்மீகி  இராமாயணம் ,
மகாபாரதம்,பகவத் கீதை,மனுதர்மம்  
தேவாரம் ,திருவாசகம் ,பெரியபுராணம்  போன்ற
அவர் கருத்துக்கு எதிரான நூல்களையும்
படிப்பார் அவற்றைப்பற்றி ஆராய்ச்சியும்
செய்து தான் பேச்சில் குறிப்பிடுவார்
இராமாயணப் பாத்திரங்கள் பற்றி நூல்களும்
எழுதியிருக்கிறார் அது இந்தியிலும் மொழி
பெயர்க்கப் பட்டது வட இந்தியாவில் உள்ள
மக்கள் படிப்பதற்காக வேண்டுமென்று
புத்தகம் தவிர மற்றவற்றில்  பெரியார்
சிக்கனக் காரர்தான் உடல் நலிவுற்றால்
அரசுப் பொது மருத்துவமனையில் தான்
சேர்ந்து சிகிச்சை பெறுவார் .  அவருக்கு
மட்டுமல்ல மணியம்மையாருக்கு மாரடைப்பு  
வந்தபோது கூட அரசுப் பொது 
மருத்துவமனையில்  தான் சேர்த்தார்  அரசு பொது மருத்துவ மனையில்
நோய் சரியாகவில்லையெனில்
மருத்துவர்கள் சடகோபன் அல்லது
சுந்தரவதனம் போன்றவர் களை அழைப்பார்
அல்லது வேலூர் கிறித்தவ மருத்துவ மனைக்குப்
போவார் பார்த்துக் கொள்வதற்கு
அவர் மாதத்தில் நான்கு அல்லது ஐந்து
நாட்கள் தவிர மற்ற நாட்களில் தன்
சாதி ,மதம் ,கடவுளுக்கு எதிரான பரப்புரையை
மேற்கொள்ளுவார் மனம் விரும்பி
பரப்புரைக்காக ஊர் ஊராய்ச் சுற்றுவார்
ஆனால் தனியார் விடுதிகளில்  வாடகைக்கு
அறை எடுத்து தங்கமாட்டார் சிக்கனம்
கருதி, .  நகராட்சிகளில் உள்ள பயணியர்
விடுதிகளில் தான் தங்குவார் எப்போதும்
அவருடைய சிக்கனம்  மக்கள் கொடுத்த பணம்
செலவாகாமல் சேமிப்பானது லட்சங்களில்
சேர்ந்தது . அதைக்கொண்டு இயக்கத்துக்கான சொத்துக்களை
வாங்கினார் .  சென்னை வேப்பேரியில் (டிராம்) தண்டூர்தி கொட்டகை
இருந்த இடத்தை வாங்கி பெரியார் திடலை உருவாக்கினார்
அதேபோல் திருச்சியில் புத்தூரில் பள்ளி,அனாதை இல்லம்
போன்றவற்றை  உள்ளடக்கிய பெரியார் மாளிகையை
எழுப்பினார் .தஞ்சையில் அரண்மனைக்கு எதிரில்
பெரியார் இல்லம் அமைத்தார் சிறப்போடு  

.

2 comments:

  1. Ur kavithai reg periyar is nice. So many Informations reg periyar

    ReplyDelete
  2. As far as Periyar is concerned, economy is his part of preachings. He emphasised savings and simplicity throughout the life. Nachiappan has written all these things in his verse. congrats.

    ReplyDelete