Thursday, January 19, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - தமிழ்

பெரியார் பிறப்பால் கன்னடராக இருந்தாலும்
அவருடைய வீட்டு மொழி தமிழ் தான் 
கன்னடம் பேசத் தெரியாது சரியாக
தந்தையாரின் வணிகத் தொடர்புகளால் தெலுங்கு
தெரியும் கொஞ்சம் கொஞ்சம் பெரியாருக்கு
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்
தொல்காப்பியத்திலேயே ஆரியக் கருத்துக்கள்
நுழைந்து விட்டன என்றார் அவர்
சிலப்பதிகாரத்தில் ஆரியக் கருத்துக்கள் இல்லாமல்
எத்தனை வரிகளைக் காட்டமுடியும் என்றார்
தேவாரம் திருவாசகமெல்லாம் கடவுளைப்
போற்றி போற்றி என்பதால் அது இலக்கியமா  
என்று கேட்டார் பெரியார் கவலையோடு
வள்ளுவர் ,அவ்வை ,கபிலர் போன்ற
சில புலவர்களே ஒழுக்கம் பற்றிப் பாடினார்கள்
என்றார் பெரியார் பெருமிதத்தோடு
பாரதியாரைப் பொறுத்தவரை அவர் ஒரு
கொள்கையில் நிற்க மாட்டார் என்று சொல்கிறார்
கடவுள்,மதம் சாஸ்திரம் ,முன்னோர் நடப்பு
எல்லாம் கூறியுள்ளார் அவர்
பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்களை பள்ளிப்
பிள்ளைகளுக்கு பாடமாக வைக்க வேண்டும் என்றார்
உலகத் தமிழ்  மாநாட்டில் கம்பர்,கண்ணகி,பாரதியார்
ஆகியவர்களுக்கு சிலை வைக்கப்பட்டது  பற்றி
வருத்தப்பட்டார் பெரியார்
15.1.1949 மற்றும் 16.1.1949 ஆகிய நாட்களில்
சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தினார்
ஆரிய கால பண்பு ,ஒழுக்கம் ,நெறி
ஆகியவற்றிலிருந்து தமிழர்களுடைய
பண்பு ,கலை ,ஒழுக்கம் ,நெறி ஆகியவை
மறுபாடானது என்பதை உணர்த்தவே
திருக்குறள் எழுதப்பட்டது என்றார் பெரியார்
ஆய்வு நோக்கோடு  முன்வந்து
இம்மாநாட்டில் பங்குகொண்டு தத்துவங்களை
உணர்ந்து தமிழ் பாமர மக்களுக்கிடையே
அந்தத் தத்துவங்கள் பரவும்படி செய்ய வேண்டும் என்றார்
இந்த மாநாட்டில் திருவிக ,தெ பொ .மீ , நாவலர்
சோமசுந்தர பாரதியார் ,முத்தையா முதலியார் ,
மா .இராசமாணிக்கனார் ,திருக்குறள் முனுசாமி ,
நெ .து .சுந்தரவடிவேலு ,புலவர் குழந்தை
அண்ணா ,பேராசிரியர் இலக்குவனார்
கலந்துகொண்டனர் ,பெரியார் சிறப்புரை
ஆற்றினார் மாநாட்டில் மகிழ்ச்சியோடு
புலவர்களிடம் சிக்கி இருந்த திருக்குறளை
பொதுமக்களிடம் கொண்டுசென்ற பெருமை
பெரியாரைச் சேரும் .  ஆண்டுதோறும்
குறள்  மாநாடு கூட்டுவதென்றும்  குறளை
எல்லோரும் படித்துணரும் வகையில்.
மிக எளிய உரை எழுதி வெளியிடுவது என்றும் 
மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது
பெரியார் எழுதினார் குறள் ஆராய்ச்சிக்
கட்டுரைகள் .  பெரியார் வேண்டிக்  கொண்டதற்கு
இணங்க எளிய உரைகள் வெளிவந்தன
காரைக்குடி  போன்ற  ஊர்களில் ஆண்டுதோறும்
குறள்விழா   நடைபெற்றது  என்று பார்த்தோம்
"தெய்வம் தொழாஅள்   கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை " போன்ற பகுத்தறிவுக்கு
முரண்படும் குறள்களில் வள்ளுவரோடும் கருத்து
வேறுபடுகிரார் பெரியார் வருத்தத்தோடு
பெரியார் மக்களிடம் பேசுவது தமிழில் தான்
இரண்டு  மணிநேரம் ,மூன்று மணி நேரம்
பேசுவார் .  பேசும்போது கேட்கிறவர்களிடம்
கேள்வி  கேட்கும்படி கூறுவார்  கேள்விகளுக்கு
சுவையாக  பதில் கூறுவார் உவகையோடு
அவற்றை தொகுத்திருந்தால் ஒரு புத்தகமே
போடலாம் திராவிடர் கழகத்தினர்
பேச்சுக்கு நடுவில் குட்டிக் கதைகளும் சொல்லுவார்
அவர்சொன்ன குட்டிக் கதை ஒன்று
'ஒரு மாமியார் மருமகனிடம் கரும்பு சாப்பிடச்சொல்கிறார்
அவர் சாப்பிட்டு வந்து நன்றாக இல்லை என்கிறார் காரணம்
அவர் சாப்பிட்டது புண்ணாக்கு இப்படித்தான் இசை
பாடுகிறவர்கள் கடவுள் பற்றிப் பாடுகிறார்கள் '
திரு.வி.க  சொல்கிறார் பெரியார் போல்
ஏழை மக்களுக்கு உணர்ச்சி உண்டாகுமாறு
பேசுபவர் தமிழ் நாட்டில் அரியர் என்று
கல்கி சொல்கிறார் பெரியார் பேச்சு ஒன்றைத்தான்
தன்னால் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க
முடியும்  என்று ஆர்வத்தோடு
பெரியார் தமிழிடம் அன்பு செலுத்துவதற்குக் காரணம்
அதனால் ஏற்படும் நன்மையையும் அது மறைந்தால்
ஏற்படும் தீமையையும் உத்தேசித்தே என்கிறார்
பெரியார் படிப்பதும் தமிழ் ,எழுதுவதும் தமிழ்
247 எழுத்துக்கள் எதற்கு என்று  கேட்டு
எழுத்து சீர்திருத்தம் செய்ததும்  அவர்தான்
தமிழ் பழங்கால மொழியாகவே இருக்கிறது
வளர்ந்து அறிவியல் மொழியாக பகுத்தறிவு
மொழியாக வளரவில்லை என்று வருத்தப்படுகிறார் 
தமிழிசைக்கும் தொண்டு செய்தார்
அண்ணாமலைப் பல்கலையில் தமிழிசை வளர்ச்சிக்கு
ஏற்பாடு செய்த அண்ணாமலை அரசரைப் பாராட்டினார் 
தமிழிசை மாநாடு அமைத்தார்
எம் எம் தண்டபாணி தேசிகரைக் கொண்டு
இசை நிகழ்ச்சிகளை  நடத்தினார் அவர் பஜனைப்
பாடல்களையே  பாடினார் பெரியார் கண்டித்தார்
சென்னையில் நடைபெற்ற பாவேந்தருக்கு
நிதியளிக்கும் விழாவில் தேசிகர் பாவேந்தரின்
பாடல்களை பாடி எல்லோரையும் அசத்தினார்
இது பெரியார் செய்த தமிழிசைத் தொண்டு



No comments:

Post a Comment