Thursday, January 26, 2017

தந்தை பெரியார் வசன கவிதை _ குழந்தை

புலவர் குழந்தை ஈரோடு மாவட்டத்தில் ஓலவலசு
என்னும் சிற்றூரில் 1.7.1906 ல் பிறந்தவர்
பெற்றோர் முத்துச்சாமி -சின்னம்மையார் ஆவர்
அவர் ஊரிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் தமிழ்ப்
புலவர்  எவருமில்லை தானாகவே படித்து
சென்னைப் பல்கலைக்கழக புலவர் பட்டம்  1934 ல்
பெற்றுச் சிறந்தார் குழந்தை முயற்சி  மிக்கவராக
யாப்பிலக்கணம் அறியா முன்னரே அவர்  பாடிய
பாடல்கள் யாப்பமைதி உடையனவாய் இருந்தன
1918ல் 'கன்னியம்மன் சிந்து 'என்னும் நூல்அச்சாகியது
'இராவண காவியம் ' உட்பட ஏழு செய்யுள் நூல்களும்
திருக்குறள் குழந்தை உரை, தொல்காப்பியப் பொருளதிகாரம்
குழந்தை உரை ,நீதிக்களஞ்சியம் உரை ஆகிய உரை நூல்களும்
யாப்பதிகாரம்,தொடையதிகாரம் ,இன்னூல்
(சூத்திரம் ) எனும் இலக்கண நூல்களும்
தொல்காப்பியர் காலத் தமிழர் , திருக்குறளும் பரிமேலழகரும்
பூவா முல்லை (இம்மூன்றும் ஆராய்ச்சிநூல்கள்)
கொங்குநாடுதமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
உள்ளிட்ட 16 உரைநடை நூல்களும் இயற்றினார்
வாழ்க்கைத் துணைவியார் முத்தம்மையார்
கல்வி அறிவு வாய்க்கப் பெறாதவர் எனினும்
பொது அறிவு நிரம்பப் பெற்றவர் ஆவர்
தன்மானக் கொள்கை உடையவர்
இந்தஇணையருக்கு சமத்துவம்,சமரசம் என
அறிவார்ந்த இரு பெண் மக்கள் உள்ளனர்

'இராவண காவியம் 
குமரிக்கும் விந்தத்திற்கும் இடைப்பட்ட நாடு
திராவிடம் எனப்பட்டது .   இரண்டாம் கடல்கோளின்
பின்னர் இலங்கை உண்டானது புவியில்
'தமிழர் தலைவன் வச்சிரவாவு மனைவி
கேகசி என்பாள் இராவணன் ,கும்பகர்ணன் , பீடணன்
என்னும் மூன்று ஆண் மக்களையும் காமவல்லி(சூர்ப்பனகை)
என்னும் பெண் மகளையும் பெற்றாள் 
மூத்தவனான இராவணன் முடிபுனைந்து
தமிழகத்தை ஆண்டு வந்தான்
மாயோன் மகள் வண்டார்குழலியும் (மண்டோதரி) காதல்
மணம் புரிந்து இல்லறம் நடத்தினர்
சேயோன் (இந்திரஜித்து) என்ற செம்மலைப் பெற்றனள்
வடநாட்டில் ஆரியர் என்னும் ஓரினத்தினர்
வாழ்ந்து வந்தனர் . ஆரிய  இளைஞர்
தமிழ்ச் செல்வ இளைஞரிடம் தோழமை
கொண்டு பார்ப்பன வேலையும் பார்த்து வந்தனர்
ஆரியர் வேள்வி மூலம் உயிர்களைக் கொன்றுண்ணத்
தொடங்கினர் . தமிழ் மக்கள் அதனைத் தடுத்தனர் 
அவர் கேட்கவில்லை  இருபாலருக்கும் போர் உண்டானது 
தாடகை என்னும் தமிழரசி இராவணன்
துணையை வேண்டினாள் அவன் சுவாகு
என்னும் படைத் தலைவனைப் பெரும்
படையோடு அனுப்பினான் உதவிட
தயரதன் மனைவிகள் கோசலை இராமனையும்
கைகேசி பரதனையும் சுமத்திரை இலக்குவ
சத்துருக்கனையும் ஈன்று வளர்த்தனர்   
இராமன் வில்லை ஒடித்து சனகன் மகள்
சீதையை மணமுடிக்கிறான்
கைகேசி சூழ்ச்சியால் இராமன் காடேகிறான்
சீதையோடும் இலக்குவனோடும்
பரதன் நாடாள்கிறான் வருத்தத்தோடு
முனிவர்கள் சுரன் தங்களை வேள்வி செய்ய விடாமல்
தடுப்பதாகவும் இராமன் உதவிட வேண்டும் என்றும்
வேண்டினர் .  இராமனும் உதவினான் அவர்கட்கு
இராமன் தனித்துலாவிய காமவல்லியாம்
தமிழரசியை கண்டு காமுற்று பிடித்து இழுக்கிறான்
இராமன் தன் தம்பி இலக்குவனைக் கொண்டு
காமவல்லியின் காதையும் முலைக்கண்களையும் அறுத்து
முன்னேறப்பாடில்லாத சுரனையும் பொருதழிக்கிறான்
தூதரால் செய்தி அறிந்த இராவணன் கொதித்தெழுந்து
காமவல்லி வளர்த்த மானை விட்டு இராம இலக்குவரைப்
பிரித்து வீரரை வைத்து சீதையை எடுத்து வந்தனன்  சீதையிடம் உன் கணவன் வரின் நல்லறிவு புகட்டி
அவுனுடன் அனுப்புகிறேன் அஞ்சேல் எனத் தேற்றி
தங்கையின் நிலையில் வைத்துப் போற்றினான் 
மதங்கர் அனுமனை அறிமுகப் படுத்த
அனுமன் சுக்ரீவன் உதவி கேட்கலாம் என்று
சொல்ல சுக்ரீவன் கிட்கிந்தைக்கு அரசனாக்கினால்
சீதையை மீட்க உதவுவேன் என்கிறான் 
இராமன் அதற்கிசைந்து வாலியுடன் சுக்ரீவனை
போரிடச்சொல்லி போர் நடக்கும் போது மறைந்திருந்து
அம்பெய்து வாலியை கொல்கிறான்
இராமன் சுக்ரீவன் படையோடு இலங்கையை
முற்ற வரப் போவதாககூறினான்
சுக்ரீவனது அமைச்சரான அனுமனை சீதையை
பார்த்துவரும்படி கூறினான்          அனுமன்
ஓர் ஆரியனால் பீடணனை சந்திக்கிறான் 
அனுமன் சீதையை காண்கிறான்  இராமன் படையோடு
வந்து உன்னை மீட்டுச்செல்வான் என்று பகர்ந்தான் 
சீதை இராவணன் பெருமை கூறி தனியாக வரும்படி
சொல்லி  திரிசடையுடன் சென்றாள்
அனுமனை திரும்பும் வழியில் காவலர் பிடித்துக்
கொள்ள இராவணனிடம் கொண்டு சேர்த்தனர்
இராவணன் அனுமனின் இரண்டகச் செயலை
கண்டித்து இராமனைத் தனியாக வந்து
மன்னிப்புக் கேட்டு மனைவியை அழைத்துச்
செல்வானாக என்று பணிக்கிறான்
அனுமன் சென்று கூறவே இராமன் பணிவை
மறுத்து படையுடன் சென்று இலங்கைப்
புறத்தே தங்கினான் .  இராவணன் அதிகாயனைத்
தூது விட்டான் . இராமன் பணிவை மறுத்துப்
போருக்கு அணியமென தெரிவித்தான்
பீடணன் இராமன் திறமை கூறி போரைத்
 தவிர்ப்போம்  சீதையை விடுவோம் என்றனன்
இராவணன் பீடணனை அவையை விட்டு
ஏகும்படி கூற படைத்தலைவர் சிலரொடும்
சென்று இராமன் காலில் விழுந்தான்
இராமன் பீடணனை இலங்கை அரசனாக முடி
சூட்டினான் .    பீடணன் இலங்கையை வெல்லும்
உளவினை இராமனுக்கு உரைத்தான்
இதை அறிந்த இராவணன் போருக்கு அணியமானான்
பகைவர் நிலை அறிய ஒற்றரை அனுப்பினான்
பீடணன் அவரைக் காட்டிக் கொடுத்தான்
இராமன் அவரை சிறையிலிட்டான்
மதில் போரில் இலங்கை வென்றது
இரு தரப்பிலும் பலர் மாண்டனர் 
கும்பகர்ணனுக்கும் இராமனுக்கும் கடும்போர்
நடந்தது .   இராமன் முறை தவறிக் கை கால்களை
அறுத்துக் கொன்றான் கும்பகர்ணனை
செய்தி கேட்ட இராவணன் கதறி அழுதான்
அவனைத் தேற்றிய சேயோன் ஆரியப்படையோடு
பொருதான் வலிவோடு
பீடணன் இதுவே அவனைக் கொல்ல ஏற்ற
காலம் என்று எடுத்துக்கூறினான்
இராமன் ஏவ  இலக்குவன் ,பீடணன் ,சுக்ரீவன்
அனுமன் முதலியோர் பெரும் படையுடன்
வளைத்துப் பொருதனர் சேயோனோடு
ஒருவன் பின்னாலிருந்த தேர்ப்பாகனைக் கொன்றான்
பீடணன் குதிரைகளை கொன்றான் .   அந்தோ
சேயோனின் அம்புக்கூடு வறிது பட்டது .  முடிவில்
இலக்குவன் ஓர் அம்பை ஏவி தமிழர் குலக் கொழுந்தை
கொன்றான்  இராவணனை கதற விட்டே
இராவணன் களம் புகுந்தான் இராமனோடு
கடும்போர் புரிந்தான் வீரத்தோடு
இலக்குவன் முதலிய அனைவரும் சூழ்ந்து
போர் புரிந்தனர் .  இராமன் தேர்ப்பாகனைக் கொன்றான்
பீடணன் குதிரைகளைக் கொன்றான்
இராவணன் அக்கழிசடை மீது வாளை ஓங்கினான்
இலக்குவன் பக்கம் வாளெரறியத் திரும்பும்போது
மாதலி என்பான் ஒரு கூரிய அம்பை இராமனிடம்
கொடுத்து வாள் எறிந்து திரும்பு முன் கொல்க எனவே
முறை கெட்ட இராமன் தலையறுத்தான் 
தமிழர் தலைவன் மண்ணில் புரண்டான்
அடுகளம் அழுகளம் ஆனது அங்கே
வண்டார்குழலி உடனுயிர் விட்டாள்
பீடணன் சீதையை அழைத்துவர அவள்
இராவணன் பெருமை கூறி வருந்தினாள்
இராமன் பொருட்படுத்தவில்லை அதை
இராமன் பீடணனை இலங்கைக்கு அரசனாக்கி
பெரும் படையும் காப்பாக வைத்தான்
சுக்ரீவன் கிட்கிந்தைக்கு அரசனானான்
இராமன் அயோத்தி சென்று முடிபுனைந்து
அரசு புரிகிறான் .   தவம் செய்யும் சூத்திரன்
சம்புகனை கொல்கிறான் சினத்தோடு
ஒரு நாள் ஒரு ஒற்றன் வந்து அயலான் மனையில்
பல மாதம் இருந்த சீதையை இராமன் வைத்துக் கொண்டான்
என்று ஊரார் பேசுகின்றனர் என்று சொல்கிறான்
இராமன் அதை சீதையிடம் கூறி வருந்தினான்
சீதை பழிக்கு அஞ்சக்கூடாது என்று தேற்றினாள்
எனினும் மனம்ஒப்பாது இலக்குவனால் சீதையை
காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு நாடாண்டு
வந்தான் கவலையின்றி சிறிதும்
இராவண காவியம் ஐந்து காண்டங்களையும்
3100 பாடல்களையும் உடையது.
1.தமிழகக் காண்டம்                      454 பாடல்கள்
2.இலங்கைக்காண்டம்                        524       "
3விந்தக் காண்டம்                        656       "
4பழிபுரி காண்டம்                        636       "      
5.போர்க் காண்டம்                       830       "
                                             -----------
                                              3100
                                              -----------  
கம்பர் போலிச்சோழர் காலத்தில் கம்ப இராமாயணத்தை
எழுதியிருக்கிறார் அதனால் ஆரியரை உயர்த்தியும்
தமிழர்களை தாழ்த்தியும் கவி புனைந்திருக்கிறார்
பண்டிதர் நேரு கூட அவர் மகள் இந்திராகாந்திக்கு
எழுதிய கடிதத்தில் இராமாயணம் ஆரிய திராவிடப்
போர்தான் என்று சொல்கிறார் தெளியும்படி
தாய்மொழிப் படலத்தில் தமிழகத்தின் கல்விநிலை
பற்றி புலவர் குழந்தை பாடுகிறார் காண்போம் :

ஏடு கை இல்லாரில்லை
இயலிசை கல்லாரில்லை
பாடுகை இல்லாரில்லை
பள்ளியோ செல்லாரில்லை
ஆடுகை இல்லாரில்லை
அதன்பயன் கொள்ளாரில்லை
நாடுகை இல்லாரில்லை 
நற்றமிழ் வளர்ச்சியம்மா
ஆரியர்கள் தமிழகத்தில் புகுவதை பாடுகிறார்
"நஞ்சனைய வஞ்சகர்கள்
மன்னரையு மவர்களோடு
நம்பச் செய்தார் "
ஆரியர் செய்தபிழைகள்
1.இராவணனுடைய  நாட்டுக்குள் அவன் உடன்பாடின்றி வந்தனர் 
2.நாட்டுமக்கள் தடுத்தும் கேளாமல் அந்நாட்டுவிலங் குகளை கொன்றுதின்றனர்
3.அரசன் ஆணையையும் புறக்கணித்து கொலைத்தொழில் புலைத்தொழில் செய்தனர்
4.குடிப் பழக்கமில்லாத நாட்டில் மதுவிலக்கு சட்டத்தை மீறிக் குடித்தனர்
5.வடநாட்டு அரசர்களை  துணைக்கு அழைத்துவந்து வட தென்னாட்டு பகையை உண்டாக்கினார் 
கம்பர் செய்த பிழைகள்
1.வாழ்மீகியார் ஒரு அரசகுமாரனாக கூறியுள்ள, இராமனை திருமாலின்
   திருவிறக்கம் (அவதாரம்) ஆக்கினார்
2.எவளோ ஒருத்தி பெற்று எறிந்துவிட்டு செல்ல , சனகனால்
     கண்டெடுத்து வளர்க்கப் பட்ட சீதையை திருமகளின் திருவிறக்கம்
      ஆக்கினார்
3.மாபெரும் தமிழர் தலைவனான இராவணனை அரக்கர் தலைவர்
   ஆக்கினார்
4.மானமிக்க மறத்தமிழர்களை வானரங்கள் ,குரங்குகள் ஆக்கினார்
 5.தம் இனத்தை கட்டிக்கொடுத்த மானங்கெட்ட தமிழர்களை
             -ஆரிய  அடிதாங்கிகளை ஆழ்வார்ப்பட்டம் சூட்டிப் பெருமைப்
            படுத்தினார்
கம்பரின் இந்தப் பிழைகளை தமிழர்களுக்கு உணர்த்தவே
பு;லவர் குழந்தையால் இராவண காவியம் எழுதப் பட்டது
இராவண காவியம் காங்கிரசு அரசால்
தடை செய்யயப்பட்டது வீம்பாக
23 ஆண்டுகளுக்குப் பின்னர் கலைஞர்
தடையை நீக்கினார் மனமுவந்து
பாவேந்தர் இராவணனைப் பற்றி சொல்லும்போது
"தென்சிசையைப் பார்க்கின்றேன் என்செய்வேன் என்றன்
சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்கு தடடா "என்கிறார்

இராவண காவியத்தை பாராட்டும்போது 

"பாவணமல்கும்  இராவண காவியம் "  என்கிறார்

No comments:

Post a Comment