Friday, January 6, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - பதவி

தன்னிடமிருந்த  29 பதவிகளைத் தூக்கி  எறிந்தார்
பெரியார் என்று பார்த்தோம் அதற்குப் பிறகும்
இரு  முறை தமிழக முதல்வர் பதவி அவரைத் தேடி
வந்தது அதையும் அவர் மறுத்தார் விரும்பாமல்
1939ல் இராஜாஜி பதவி விலகும்போது பெரியார்
நீதிக்கட்சித் தலைவர்.        ஆளுநர் ஆர்தர் ஹோப்
பெரியாரை முதல்வர் ஆகும்படி வேண்டினார்
பெரியார் மறுத்தார் அந்த வாய்ப்பை
பிறகு இரு தலைமை ஆளுநர்கள் (கவர்னர் ஜெனரல்)
கேட்டுக்கொண்டனர் முதல்வர் ஆகும்படி அதையும்
மறுத்துவிட்டார் வேண்டாமென்று .  பிறகு
இராஜாஜி  பெரியாரை முதல்வராக இருக்கும்படியும்
தான் அமைச்சராக இருப்பதாகவும் கூறினார்
அப்போதும் பெரியார் வேண்டாம் என்றார்.
பெரியார் பதவி ஆசை இல்லாததால் தான்
திராவிடர் கழகத்தில் தேர்தலில் போட்டியிடுவது
இல்லை என்ற கொள்கை  வைத்திருந்தார். 
ஆனாலும் மற்றவர்களுக்காக தேர்தல் பரப்புரை
செய்தார் .  முதலில் நீதிக் கட்சிக்குப் பரப்புரை
செய்தார் . பிறகு காமராசர் காலத்தில் காங்கிரசுக்கு
ஆதரவு கொடுத்தார் மகிழ்ச்சியோடு
1952 தேர்தலில் காங்கிரசை எதிர்த்தார்
திமுகவும் காங்கிரசை எதிர்த்தது
திமுக 1967ல் ஆட்சியைப் பிடித்தபின்
அவர்களை ஆதரித்தார் தான் வாழும் வரை
அவர்கள் பகுத்தறிவு வழியில் ஆட்சி நடத்துகின்றனர்

என்பதால் மகிழ்ச்சியோடு முன்வந்து

No comments:

Post a Comment