Friday, October 20, 2017

குறுந்தொகை - பாடல் 11

கோடி ரிலங்கு வளை  நாடொறும்
பாடிய கலுழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவன் உறைதலும் முயங்குவ மாங்கே
ஏழுவினி வாழியென் நெஞ்சே முனா அது  
குல்லைக் கண்ணி வடுகர்  முனையது
வல்வேல்  காட்டின் நன்னாட்டு உம்பர்
மொழிபெயர்  தேத்தாராயினும்
வழி விடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே
பாடலின் பொருள் :
சங்கினை அறுத்து செய்த வளையல்கள் நழுவும்படிநாள் தோறும்
பெருமை இல்லனவாய் வருந்தும் கண்களோடு புலம்பி இவ்வகை
தனித்துறைதலும் முயங்குவோம் அவ்விடத்து ஆதலின் இப்பொழுது
வாழ்வாயாக எனது நெஞ்சே எதிரில் கஞ்சம் குல்லை மாலை அணிந்த  
வடுகர் போரிடத்தை உடையதும் வலிய வேலங்காட்டினை உடைய
நல்ல  நாட்டின் மேலிடத்ததுமான மொழியும் வேறான தேயத்தினை
உடையவரானாலும் அவரோடு யானும் உடன்போக்கு வழி
விடுதலை சூழ்வாயாக, அவருடைய நாட்டைக்  குறித்து
படலைப் பாடியவர் மாமூலனார்
நயம் : தன் நெஞ்சிற்குச் சொல்வது போலத் தோழியின் காதில்படக் கூறுகிறாள் .தன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ளக் கூறும் உளவியல் இது


4 comments:

  1. கபிலரும், மாமூலனாரும் பாடியுள்ள குறுந்தொகைப் பாடல்களைப் படித்தேன். 'மொழிபெயர் தேய்த்தர் ஆயினும்' என்கிறார் மாமூலனார். என்னதான் பொருள் கிடைக்கும் என்றாலும், இன்னொரு மொழி ப்பேசும் தேசத்தில் வாழ்வதில் உள்ள துயரத்தை இப்பாடல் தெரிவிக்கிறது.

    ReplyDelete
  2. கபிலரும், மாமூலனாரும் பாடியுள்ள குறுந்தொகைப் பாடல்களைப் படித்தேன். 'மொழிபெயர் தேய்த்தர் ஆயினும்' என்கிறார் மாமூலனார். என்னதான் பொருள் கிடைக்கும் என்றாலும், இன்னொரு மொழி ப்பேசும் தேசத்தில் வாழ்வதில் உள்ள துயரத்தை இப்பாடல் தெரிவிக்கிறது.

    ReplyDelete