Sunday, October 29, 2017

குறுந்தொகை - பாடல் 15

" பறைபடப்  பணிலம் ஆர்ப்ப  இறைகொள்பு
தொன்மூ  தாலத்துப் பொதியில் தோன்றிய   
நல்லூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
செயலை வெள்வேல் விடலையோடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே
பாடலின் பொருள் :
பறைகள் ஒலிக்கவும் சங்குகள் முழங்கவும் கடவுள்தன்
மையைக்கொண்டு பழைய முதிர்ந்த ஆலினைஉடைய
பொதியின்மலைக் கண்ணே ,விளக்கமுற்றுள்ள  நல்லூரை  
இடமாகக் கொண்ட கோசரது சிறந்த மொழி போல உண்மை ஆகின்றது
தோழி . சிறந்த கழலை அணிந்த செயலைத் தளிர் போலும் வெள்ளிய 
வேலையுடைய விடலையோடு கூட்டமான வளையல்கள்
அணிந்த முன்கையினை உடைய மடந்தைக்கு உண்டான  நட்பு  
பாடலைப் பாடியவர் அவ்வையார்     நயம்:
நயம்:
தொடுவளை எனக் கொண்டு தொடுவளை முன்கை என்றாள் தலைவி

தலைவனுடன் கலந்திருத்தலால்

2 comments:

  1. அன்றைய சமூகம் காதலை ஏற்றுக்கொண்டாலும், சில தயக்கங்கள் இருக்கத்தான் செய்திருக்கின்றன. உடன்போக்கு சென்ற தன் மகளைத் தேடும் செவிலித்தாய், அவளுக்குத் திருமணம் ஆகி விட்டது என்பதை அறிந்து கொண்டதும் அம் முயற்சியைக் கைவிட்டு, பெண்ணின் தாயிடமும் அதனைக்கூறுகின்றாள். ஊர்ப்பொதுவில் மேளமும், சங்கும் ஒலித்தன என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறாள். திருமணத்தில் சங்கு ஊதும் பழக்கம் இருந்துள்ளதை அவ்வையாரின் இப்பாடல் மூலம் அறிகிறோம். ஆனால் இன்று, தமிழகத்தின் சில பகுதிகளைத் தவிரப் பிற இடங்களில் சாவுக்கு மட்டுமே சங்கு ஊதப்படுகிறது. - சுபவீ

    ReplyDelete