Sunday, October 29, 2017

குறுந்தொகை - பாடல் 18

" வேரல் வேலி  வேர்க்கோட்  பலவின்
சாரல் நாட  செவ்வியை  ஆகுமதி 
யார ஃ  தறிந்திசி  னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந்  தூங்கியாங்கு
இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே "   
பாடலின் பொருள் :
மூங்கிலாகிய வேலியினையும் வேரின் கண்ணே பழம் பழுத்தலைக்
கொள்ளும் பலாமரத்தினை உடைய மலைச்சாரலை உடைய நாட
செம்மை உடையனாதலைக் கைக்கொள் ; எவர் அதனை அறிந்தார் ?
சாரற் கண்ணே சிறிய கோட்டிடத்துப்  பெரிய பழம் தொங்குவது போன்று
இவளுயிர் மிகச் சிறியது.இவளுற்ற காமமோ பெரிய தாயிருக்கின்றது .
ஆதலின் நூற்றக்  கணக்கான ஊறுகொண்ட ஆற்றிடத்து இரவு வருதலை
இனி விட்டு வரைந்து கொள் 
பாடலைப் பாடியவர் கபிலர்

நயம்: தலைவன்அவளை மணந்து இல்லறம் பேணுவதற்கான உணர்வு எழும் என்பதாம் 

2 comments:

  1. சங்க இலக்கியங்கள் வாழ்வின் உண்மைகளையும் உணர்வுகளையும் மறைப்பதில்லை. ஒரு பெண்ணின் காம உணர்வைப் புலவர் கபிலர் எடுத்துரைக்கும் பாடல் இது. ஒரு சின்னக் கொம்பில் ஒரு பெரிய பலா தொங்குகிறது.எந்த நேரமும் அறுந்து விழும் என்ற எச்சரிக்கையின் இலக்கியமாய் அமைந்துள்ளது இப்பாடல் - சுபவீ

    ReplyDelete