Friday, October 20, 2017

குறுந்தொகை - பாடல் 13

" மாசரக் க  ழீ  இய யானை போலப்
பெரும்பெய லுழந்த இரும்பினர்த் துறுகல்
பைத லொருதலை சேக்கு நாடன்
நோய் தந்தனனே தோழி
பாலை ஆர்த்தன குவளையங் கண்ணே"
பாடலின் பொருள் :
அழுக்கில்லாமல் கழுவிய யானையை போன்றது ,பெரிய மழையினாலே
வருந்திய கோங்கின் பக்கத்தில் உள்ள நெருஙகின மலை கண்பார்க்குத்
துன்பம் உண்டகும்படி ஓரிடத்துத் தங்கும்..நாடன் பிரிந்து நோயைத்
தந்தான் ஆதலின் பசலை நிறைந்தன .குவளை போன்ற அழகிய
கண்களிடத்து .

இந்தப் பாடியவர் கபிலர்

5 comments:

  1. தலைவன் சென்று தாங்கும் காட்டில் உள்ள மலை, நன்றாகக் கழுவிவிடப்பட்ட யானையைப் போல் தூய்மையாய் உள்ளது. ஆனால் என் கண்களோ, பசலை படர்ந்துள்ளன என்கிறாள் தலைவி. அதாவது அவனுக்கு என்னைப் பற்றிக் கவலையில்லை. நானோ அவன் பற்றிய எண்ணத்தில் மூழ்கி உள்ளேன் என்கிறாள்.

    ReplyDelete