Sunday, October 8, 2017

குறுந்தொகை - பாடல் 8

கழனி மாத்து விளைந்துரு தீம்பழம்
பழன வாளை கதூஉ   மூரன்
எம்மிற்  பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே
பாடிய புலவர்  ஆலங்குடி வங்கனார்
பொருள் :வயல் வரப்பிலே உள்ள மாமரத்தினது விளைந்த
தானே வீழ்கின்ற இனிய  பழத்தை பக்கத்துப் பொதுவாகிய
நீர்நிலைச் செருவிலே உள்ள வாளை மீணானது பற்றி உண்ணுதற்கு
இடமாகிய ஊருக்குரிய தலைவன்.அவன் எம் வீட்டிலே முன்  நிற்பவர்
கையையும் காலையும் தான் தூக்கத் தானும் அவ்வாறே
தூக்குகிற கண்ணாடிப் பாவைபோல் தன் மகனுக்குத் தாயாக விளங்குகிற தலைவி அவன் விரும்புகிற வாறெல்லாம் செய்து ஒழுகுகிறாள் போலும்.

நயம்கழனிக் கரையிலுள்ள மரத்திலிருந்து முதிர்ந்து தானே உதிர்ந்த பழத்தை வயலிடத்து வாழை கவ்வினாற்போல , இவ் விடத்திலுள்ள எல்லா இன்பங்களையும் ஊரன் தானே எய்துகின்றான்       



4 comments:

  1. இந்த வீட்டில் இருக்கும்போது என்னைப் பாராட்டுகிறான். அங்கு போனால், அவள் 'மகனின் தாய்க்கு', அதாவது தன் மனைவிக்குப் பயந்து அவள் சொல்வதற்கு ஏற்ப ஆடுகிறான், கண்ணாடி முன் உள்ள உருவம் போல என்கிறாள் அவள்.

    ReplyDelete
  2. இப்பாட்டில் வரும் தலைவனுக்கு மனைவி மட்டுமின்றி, ஒரு மகனும் உள்ள நிலையில், ஆசை நாயகியிடம் உள்ள ஆசையும் குறையவில்லை. அவனைக் கேலி செய்து அந்த ஆசை நாயகி பாடிய பாட்டே இது.

    ReplyDelete
  3. நாச்சியப்பன் தேர்ந்தெடுத்துள்ள இது ஓர் அழகிய பாடல். எனினும், அச்சொற்கள் இன்று வழக்கில் இல்லாமையால், பலருக்கும் புரிந்திட வாய்ப்பில்லை. நாச்சியப்பன், அதனை உரிய நயத்துடன் இங்கு விளக்கியுள்ளமை கண்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete