Thursday, November 9, 2017

குறுந்தொகை - *பாடல் 22

"நீர்வார் கண்ணை நீ இவ   னொழிய
யாரோ பிரிகிற் பவரே சாரல்
சிலம்பணி கோண்ட வலஞ்சுரி மரா அத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் எண்ணுதல் நின்னொடுஞ் செலவே

பாடலின் பொருள் :

நீர் வடியும் கண்ணை உடையையாய் நீ இங்குத் தங்கும்படி
விட்டு எவர் பிரியுமவர் ?சாரலிடத்து மலையை அழகு செய்தலைக்
கொண்ட  வலமான சுழிகளோடு கூடிய மலர்களை உடைய வெண்
கடம்பினது அழகிய கிளைகள் வேனிற் காலத்துக் கமழ்தலைச் செய்யும்
இனிய ஊர் எண்ணுவது  நீ  உடன் சென்ற பின்பு நின்னோடும் சென்ற
தலைவன் செலவை எனவே உடன்கொண்டு செல்வதன்றி விட்டுப் பிரியான் தலைவன்   என்றாளாம் .
பாடிய புலவர் சேரமானெந்தை


நயம் : தலைவன் விட்டுப் பிரியான் என்ற குறிப்பை  உணர்த்துகிறது   

3 comments:

  1. பிரிந்து போவதுஇயல்புதான். அதனைத் தடுப்பது அவ்வளவு எளிதன்று. அதற்குப் பெரிய வலிமை வேண்டும். அந்த வலிமை உன் கண்ணீருக்கு இருக்கிறது என்று தலைவிக்குத் தோழி சொல்வதே இப்பாடல். நீர்வார் கண்ணை என்றுதான் கண்ணகியைப் பார்த்துப் பாண்டிய மன்னனும் சிலம்பில் அழைத்தான்.

    ReplyDelete
  2. பிரிந்து போவதுஇயல்புதான். அதனைத் தடுப்பது அவ்வளவு எளிதன்று. அதற்குப் பெரிய வலிமை வேண்டும். அந்த வலிமை உன் கண்ணீருக்கு இருக்கிறது என்று தலைவிக்குத் தோழி சொல்வதே இப்பாடல். நீர்வார் கண்ணை என்றுதான் கண்ணகியைப் பார்த்துப் பாண்டிய மன்னனும் சிலம்பில் அழைத்தான்.

    ReplyDelete