Sunday, November 19, 2017

குறுந்தொகை - பாடல் 23



அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன  நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே  அவள்
நன்ன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே " 

பாடலின் பொருள்

குறிசொல்பவளே   குறிசொல்பவளே   வெள்ளிய சங்குமணிக்  கோவை       போன்று நல்ல நெடுங் கூந்தல் உடையவனான அகவன்
மகளே நீ பாட்டையே பாடுவாயாக மென்மேலும் பாட்டைப் பாடிக்
கொண்டே இருப்பாயாக அவருடைய நல்ல நெடிய குன்றத்தை
பாடிய பாட்டையே  இன்னமும் பாடுவாயாக


பாடலைப் பாடியவர் அவ்வையார்

3 comments:

  1. இந்தப் பாடல், குறி சொல்லும் பெண்ணிடம் சொல்வது போல, தலைவியின் தாயிடம் தோழி சொல்லியது. உன் மகள்,அந்த நெடுங்குன்றத் தலைவன் மீது காதல் கொண்டிருக்கிறாள். இந்தக் குறி சொல்லும் பெண் அவனைப் பற்றிப் பாடினால் இவள் மனம் மகிழ்ந்திடும் பார் என்பதாக உரைக்கின்றாள்.

    ReplyDelete
  2. அறிஞர் அண்ணாவின் எழுத்துகளுக்கு பிறகே தமிழ் படிக்கும் ஆர்வம் அதிகரித்த என்னைப்போன்றவர்கப்கு,குறுந்தொகை படித்து
    புரிந்து மகிழ்வது கடினமாக உள்ள நிலையில் நம் நாச்சியப்பனின் கருத்துரை பயனுள்ள நல்முயற்சி.பாராட்டுகள்.ஆர்வம் குறையாத அவனது முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete