Thursday, November 9, 2017

குறுந்தொகை - *பாடல் 20

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோராயின்
உரவோர் உரவோ ராக
மடவ  மாக மடந்தை நாமே "
பாடலின் பொருள் :
அன்பு வளர்ந்து அருளாகும் அருள் என்னும் அன்பு ஈன் குழவி
பொருள் வயிற் பிரிதல் என்பது ஒரு துறைப் பெயர் .வாழ்வதற்கு
பொருள் இன்றியமையாதது .ஆதலின் பொருள் தேடப் போதல்
அறிவுடைமை என்று கருதப்பட்டது .ஆனால் அது அன்பையும் அருளையும் துறந்து செய்ய வேண்டுவதாகிறது

பாடியவர் கோப்பெருஞ்சோழன்.

நயம் : 
காதல் பாடலாக இருந்தாலும் பொருள் தேடப் போவது பற்றிய பாடலாக

இருக்கிறது

1 comment:

  1. அன்பையும் காதலையும் விட, பொருள்தான் பெரிது என்று எண்ணி அவன் பிரிந்து போனால் போகட்டும். உலக அறிவு கொண்டவனாக அவன் இருக்கட்டும். நாம் முட்டாள்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம் என்று கூறும் தலைவியின் ஆற்றாமையை இப்பாடல் காட்டுகிறது. இதனைப் பாடியுள்ளவன் ஓர் அரசன் என்பது வியப்பு.

    ReplyDelete