Sunday, November 19, 2017

குறுந்தொகை - பாடல் 25

" யாரு மில்லைத் தானே கள்வன்
தானவன் பொய்ப்பின் யானெவன் செய்கொ  
நினைத்தா  ளன்ன சிறுபசுங் காஅல
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே

பாடலின் பொருள் :

எவருமிலர் (அவன் கூறிய சூளுறவை உணருமவர் ) அவன்தான்
கள்வனாயினான்  . அவன் விரைவில் வரைவேன் என்ற அச்சூளுறவை ப்
பொய்த்தானாயின் ,யான் என்செய்குவேன் ? தினையினது தாளை ஒத்த 
சிறிய  பசிய கால்களை உடைய ,இடையறாது ஒழுகும் நீரின் கண்
ஆரல் மீனை (உணவிற்க்காகப் ) பார்க்கும் குருகும் உண்டு ,அவன்
மணந்த அன்று
பாடலைப்  பாடியவர் கபிலர்]







2 comments:

  1. 1. கபிலரின் இந்தப் பாடல் நம் பழந்தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிய ஒரு செய்தியைச் சொல்கிறது. அப்போது திருமணம் ஒரு விழாவாக இல்லை. விரும்பிய இருவரும் தனிமையில் , சாட்சிகள் ஏதுமின்றி மணந்துள்ளனர். அப்படி நடந்தபின் சிலர் ஏமாற்றவும் செய்துள்ளனர். அதன்பிறகுதான் திருமணம் என்ற ஒன்றே உருவாகியுள்ளது என்பதைத் தொலகாப்பியம் கூறுகின்றது.

    ReplyDelete
  2. 2. "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் / ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்பது தொல்காப்பியம். வழு என்றால் குற்றம். கரணம் என்றால் திருமணம். இங்கும் ஒருவன் ஏமாற்றி விடுவானோ என்கிற அச்சம் பெண்ணுக்கு வருகிறது. எங்கள் திருமணத்திற்கு ஒரே ஒரு நாரைதான் சாட்சி. அந்த நாரையும் ஆற்றில் வரும் மீனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது என்கிறாள் அந்தப் பெண்.

    ReplyDelete