Thursday, November 30, 2017

குறுந்தொகை - பாடல் 26

" அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரிற்  தோன்று நாடன்
தகா அன் போலத் தான் தீது மொழியினுந் 
தன்கண்  கண்டது பொய்க்குவது  தன்றே
 தேக்கொக்  கருந்து முள்எயிற்றுத்  துவர்வா ய்  
வரையாடு வன்பறழ்த்  தந்தைக்
கடுவனு மறியும்  அக் கொடியோ னையே "
இதன் பொருள்:
 முகையில்லாத படி முழுதும் மலர்ந்த கரிய கால்களை உடைய வேங்கை மரத்தினது மேனோக்கிஎழும் பெரிய கிளையிடத்தி ருந்த
மயில் அம்மரத்தின் மேலேறி மலரைக் கொய்யும் மகளிரைப் போலத்
தோன்றும் நாடன் ,தகுதி இல்லாதவன் போலத் தான் தீங்கு தருவதாக
கூறினும்,அவ னிடத்து உண்டான ஒழுக்கம் பொய்யான தன்று .
இனிய மாம்பழத்தை  உண்ணும் முள்ளினை ஒத்த கூரிய பல்லினையு,ம்
சிவந்த வாயினையும்  உடைய வரையினத்து விளையாடும் வலிய
குட்டிக்குத் தந்தையான ஆண் குரங்கும் அறியும் அக்கொடியவனை


  



2 comments:

  1. இது சற்றுக் கடுமையான பாடல். தலைவிக்கு உடல் நலமில்லையென்று கருதி கட்டுவிச்சியை அழைத்துக் குறி பார்க்க, அவள் இதற்கு வேலனே காரணம் என்கிறாள். வேலன் காரணமில்லை, இவள் காதலைப் பெற்றுள்ள குறிஞ்சி நிலத் தலைவனே காரணம் என்பதை மறைமுகமாகத் தோழி கூறும் பாடல் இது!

    ReplyDelete