Saturday, December 30, 2017

குறுந்தொகை - பாடல் 40

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்   தனவே

பாடலின் பொருள் :
என் தாயும் நின் தாயும் எம்முறையில் உறவினர் ? என்
தந்தையும் நின்தந்தையும் எவ்வகையில் உறவினர் யானும்
நீயம் ஒருவரை ஒருவர் எவ்வகையில் உரியவரென அறிந்தோம்?
செந்நிலத்துப் பெய்யும் மழை நீரானது தானும் அம்மண்ணுடன் 
கலப்புற்றுச் செந்நிறமாவது போல நம்முடைய அன்பு கொண்ட
நெஞ்சங்கள் தாமே தம்மில் கலந்து ஒன்று பட்டன .
பாடலைப் பாடியவர் பெயர் தெரியவில்லை
பாடலில் வரும் உவமையை வைத்து

செம்புலப் பெயல் நீரார் என்று பெயர் வைத்துள்ளனர்

1 comment:

  1. இப்பாடல், குறுந்தொகைப் பாடல்களிலேயே மிகவும் புகழ் பெற்ற ஒரு பாடல் என்று கூறலாம். செம்மண்ணும், நீரும் போல மணமக்கள் இருவரும் அன்பினால் கலந்திட வேண்டும் என்ற பொருளில் பெரும்பான்மையான திருமண வீடுகளில் இப்பாடல் மேற்கோளாகக் காட்டப்படுவதுண்டு.

    ReplyDelete