Saturday, December 9, 2017

குறுந்தொகை - பாடல் 31

மள்ளர் குழீஇய விழவினாலும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண் தக்கோனை
யானுமோ  ராடுகள மகளே என்கைக்  
கோடீரிலங்கு  வளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே

பாடலின் பொருள் :
அயலார் தலைவியை மனத்தின் பொருட்டாக வரைந்து வந்த காலத்து
தலைவி தோழிக்கு தன்னுடைய நிலையை வெளிப் படுத்துகிறாள் 
அவனோ பீடுகெழு குரிசில் மாண் தக்கோன் ;யானும் குலமகள்
எனினும் என்னைக் கைவிட்டு அவன் பிரிய அவனை நான் யாண்டும்
சென்று தேட என் தகுதியும் கெட்டு அவன் தகுதியும் கெட நேர்ந்ததன்றி
அவனை எவ்விடத்தும் கண்டிலன் என்கின்றாள்

நயம் :
தலைவனை தகுதி கேட்டுத் தேடியும் எங்கும் கண்டிலள் என்கிறாள் 

பாடலைப் பாடியவர் ஆதி மந்தியார்

1 comment:

  1. இந்தப் பாடல், ஆதிமந்தி ஆட்டநந்தி கதையின் ஒரு பகுதி. அவன் மன்னன் என்று அறியாமல் அவனும் ஆடுகள மகனே என்கிறாள். கவிஞர் கண்ணதாசன் இவர்களின் கதையை ஒருகாவியமாக எழுதியுள்ளார். "மன்னாதி மன்னன்" என்னும் திரைப்படமும் இந்த வரலாறு தழுவியதே.

    ReplyDelete