Wednesday, December 20, 2017

குறுந்தொகை - பாடல் 36:

துறுக லய லது   மானை மாக்கொடி                                 
துஞ்சு களி றிவரும் குன்ற நாடன்
நெஞ்சுகளன் ஆக   நீ யலன் யான் என
நற்றொன் மணந்த ஞான்றை மற்று –அவன்
தாவா வஞ்சினம்  உரைத்தது
நோயோ - தோழி -- நின்யி னானே

பாடலின் பொருள் :
சூளுறவு பொய்த்தலால் வரும் நோயைக் குறித்துத் தொடர்புடைய
தாமே கவலைப் படாதிருக்க நீ ஏன் துன்புறு கின்றாய் என்பதாம் .நெஞ்சு
அறிய  உரைத்த சூளுறவைப் பொய்ப்பின்  தன் நெஞ்சே தன்னைச் சுடும்
என்பதனாலே அது அவனுக்கு நோயாகும்.

நயம்:
நெஞ்சு  கனமாக என்பதற்கு நின் நெஞ்சு இடமாக இருந்து என்பாரும்  உளர் .நெஞ்சு இடமாக இருத்தலில் பிரிந்த பொழுதும் தவறு இலனாகலின் அது கூறான்  என்க

பாடியவர் பரணர்

3 comments:

  1. மாணைக் கோடி, அருகில் உள்ள கல்லின் மீது படராமல், தூங்கிக் கொண்டிருந்த யானையின் மீது படர்ந்தது. தூக்கம் கலைந்து யானை எழுந்து சென்ற பின், அந்தக் கொடி அங்குமிங்கும் அலைபாய்ந்ததாம். அப்படித்தான் தலைவனின் உறுதிமொழியை நம்பிய நானும், அவன் பிரிந்து சென்றபின், அலைபாய்கிறேன் என்கிறாள் தலைவி!

    ReplyDelete