Saturday, December 9, 2017

குறுந்தொகை - பாடல் 29

நல்லுரை இகந்து புல்லுரைத் தா அய்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளந் தாங்கா வெள்ள  நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் 
பெரிதா லம்மநின் பூசலுயர் கோட்டு
மகவுடை மந்தி போல
பெரிதாலம்மநின் பூசலுயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அக னுறத் தழீஇக் கேட்கு நர்ப்பெறினே

பாடலின் பொருள் :
அங்ஙனம்     பூசலை அகனுறத் தழுவிக் கேட்பாரின்மையின் உள்பூசல்
பயனின்றாகும் என்பது கருத்து . தன் விருப்பத்திற்கிணங்கி இரவுக் குறியில்
வர உடன் படுதல் .இரவுக்குறி மறுத்தல் .ஆசை வெள்ளத்திற்கும் ,அதனைத்
தாங்காது உருகும் பசு மட் கலத்திற்கும் உவமை . 
நயம் : தண்ணீர் பட்டவு டன்  உருகி அழிதலின் எண்ணியவுடனே  உருகும் உள்ளத்திற்கு உவமையாக்கினாள்

படலைப் பாடியவர் அவ்வையார்




1 comment:

  1. நாச்சியப்பன் முன்வைத்துள்ள அவ்வையாரின் குறுந்தொகைப் பாடல், ஆசைக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது. பசு மண்ணாலாகிய குடம் நீரை ஏற்கும், ஆனால் அது நிலைக்காது. அழகிய உவமை அவ்வையின் கொடை!

    ReplyDelete