Wednesday, December 20, 2017

குறுந்தொகை - பாடல் 34

 “ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கவ்வை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இவ் ஊரே
முனா அது யானையங் குருகின் கானல் அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்ப இசை வேறூஉம்
குட்டுவன் மாந்தை அன்ன எம்
குழல்  விளங்கு ஆய்நுதற் கிழவனும் அவனே

பாடலின் பொருள் :
இன்னாது கேட்டுக் கலங்கிய ஊர்ப் பழி இனி மணமங்கள
ஒலியாகிய இன்னோசை கேட்டு இன்புறுமாறு அவளுக்குத்
தலைவனுடன் மணம் உறுதியாயிற்று என்பதாம்.

நயம் :கொல்லி மலையைச் சேர்ந்தவ ராதலால் அவர்க்குரிய மாந்தைப் பட்டினத்தைக் கூறினார்.

பாடலைப்  பாடியவர்  கொல்லிக் கண்ணனார்

2 comments:

  1. தலைவியின் காதலைப் பெற்றோர் ஏற்கவில்லை. வேறு யாரோ பெண் கேட்டு வருகிறான். தலைவி தனியே உறைந்து அழுகிறாள். என்ன வியப்பென்றால், அவள் காதலித்த தலைவனைத்தான் பெற்றோரும், அவன் யாரென்று தெரியாமல், உறுதி செய்ய முயல்கின்றனர். இதனை அறிந்த தோழி, தலைவிக்குச் சொல்லும் செய்தியே இப்பாடல். "இனியது கேட்டு இன்புறுக" என்கிறாள்!

    ReplyDelete