“மள்ளர் குழீஇய விழவினாலும் 
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண் தக்கோனை 
யானுமோ  ராடுகள மகளே என்கைக்   
கோடீரிலங்கு  வளை நெகிழ்த்த 
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே”
பாடலின் பொருள் : 
அயலார் தலைவியை மனத்தின் பொருட்டாக
வரைந்து வந்த காலத்து 
தலைவி தோழிக்கு தன்னுடைய நிலையை வெளிப்
படுத்துகிறாள்  
அவனோ பீடுகெழு குரிசில் மாண் தக்கோன் ;யானும் குலமகள் 
எனினும் என்னைக் கைவிட்டு அவன் பிரிய
அவனை நான் யாண்டும் 
சென்று தேட என் தகுதியும் கெட்டு அவன்
தகுதியும் கெட நேர்ந்ததன்றி
அவனை எவ்விடத்தும் கண்டிலன் என்கின்றாள்
நயம் :
தலைவனை தகுதி கேட்டுத் தேடியும்
எங்கும் கண்டிலள் என்கிறாள்  
பாடலைப் பாடியவர் ஆதி மந்தியார்
இந்தப் பாடல், ஆதிமந்தி ஆட்டநந்தி கதையின் ஒரு பகுதி. அவன் மன்னன் என்று அறியாமல் அவனும் ஆடுகள மகனே என்கிறாள். கவிஞர் கண்ணதாசன் இவர்களின் கதையை ஒருகாவியமாக எழுதியுள்ளார். "மன்னாதி மன்னன்" என்னும் திரைப்படமும் இந்த வரலாறு தழுவியதே.
ReplyDelete