Friday, January 19, 2018

குறுந்தொகை - பாடல் 48

தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையாறு ஓம்பென
ஓரை ஆயம் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க ,ன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே ?"

பாடலின் பொருள் :

பூந் தாதுகளால் செய்த மிகுந்த குளிர்ச்சியை உடைய பாவையானது
காலை நேரத்தில் வருந்துகிறது .செயலற்று வருந்தும் அதன்
துன்பத்தைப் போக்குக என்று 'ஒரை என்னும் விளையாட்டின் போது

தோழியர் கூட்டம் தலைவியிடம் கூறியது அதைக் கேட்டும் இத்தகைய தன்மையுடன் வருந்திப் பிரிவாற்றாது பெரிதும் துன்புறுகிறாள் நல்ல நெற்றியை உடைய தலைவி .அவளது பசல நோய் நீங்கும்படி அவள் விருப்பத்திற்கு ஏற்ற பண்பினை உடைய அந்த ஒரு சொல்லை உன்னை விரைவில் மணந்து கொள்வேன் என்று சொல்ல காதலருக்கு  மனம் இசையாதோ

பாடலை பாடியவர் பூங்கணுத்திரையார் 

1 comment:

  1. பாவை - மணலில் வீடு கட்டி விளையாடுவது போல பாவைப்பொம்மை செய்து மகளிர் விளையாடும் விளையாட்டு பாவை. இந்தச் சங்ககால விளையாட்டு மார்கழி மாதத்தில் வைகறைப் பொழுதில் பாவையரை எழுப்பி அழைத்துக்கொண்டு சென்று நீராடும் விளையாட்டாக மாற்றம் பெற்றதை 'திருப்பாவை', 'திருவெம்பாவை' பாடல்களால் அறியலாம்.
    ஓரை - நீரோடும் நிலத்தில் மகளிர் தோழிமாருடன் ஆடும் விளையாட்டு.
    விளையாடும் மகளிர் பூந்தாதுகளால் பொம்மைப்பாவை செய்து பகலில் விளையாடினர். இதனை இப்படியே விட்டுவிட்டுச் சென்றால் காலையில் இந்தப் பாவை வருந்தும் என்று தலைவியிடம் தோழிமார் கூறினர். அதனால் தலைவி இரவு முழுவதும் அதனைக் கைநழுவ விடாமல் காத்துக்கொண்டு வருந்தினாள். இவள் நன்னுதல் பாவை. இவள் கையாறு ஓம்பியதோ தாதினால் செய்த பாவை. இவளுக்கு ஆறுதல் சொல்லக்கூடாதா என்று தோழி காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்கும்படி தலைவியிடம் கூறுகிறாள்.

    பாடியவர்
    பூங்கணுத்திரையார். பொங்கி வரும் ஊதைக்காற்றின் கடல்லையைப் பாடிய காரணத்தால் இவர் பூம் கணுத் திரையார் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளார்.

    ReplyDelete