Sunday, January 21, 2018

குறுந்தொகை - பாடல் 58

 ’’இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
 நிறுக்க லாற்றினோ நன்றுமற்  றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே

பாடலின் பொருள் :

என்னை இடித்துரைக்கும் நண்பரே தனது வேண்டுகோளை நிறைவேற்று முகத்தான் இத்துன்பத்தை யான் நிறுத்தி ஆற்றியிருப்பேனாயின், மிக நல்லது .அதுவே என் விருப்பமும் .ஆனால் இயலவில்லையே. கை இல்லாத ஊமன் ஒருவன் கண் எதிரே பார்த்துக் காக்கின்ற வெண்ணெயைப் போல இத்துன்பம் , என்னுள் பரந்து அதிகமாகி விட்டது .என்னால் பொறுத்துக்  கொள்ளுவதற்கு அரிதாக இருக்கிறது.


பாடலைப் பாடியவர் வெள்ளி வீதியார்

2 comments:

  1. குறிப்பிடத்தக்க பழந்தமிழ் பெண்பாற் புலவர் வெள்ளிவீதியார். பெண்களின் காம உணர்வை இலக்கிய நயத்தோடு வெளிப்படுத்திய துணிச்சல்காரர். இரண்டு கைகளும் இல்லாத, அடுத்தவரை அழைக்கவும் முடியாத ஊமை ஒருவன், பாறையில் உருகும் வெண்ணையை எப்படிக் காப்பாற்ற முடியும் என்னும் அவர் கேள்வி அழகு!

    ReplyDelete
  2. Playtech Casino - DrmCD
    The world's leading gaming supplier and provider of gaming solutions 보령 출장샵 and solutions, has built a reputation for offering innovative, mobile-focused products 논산 출장샵 across  광명 출장마사지 Rating: 진주 출장샵 3.3 · ‎3 votes 인천광역 출장샵

    ReplyDelete