Friday, January 19, 2018

குறுந்தொகை - பாடல் 50

ஐயவி  அன்ன சிறுவீ  ஞாழல்
செவ்வி  மருதின் செம்மலொடு தாஅய்த்
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந் 
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே " 

பாடலின் பொருள் :

ஞாழல் மரத்தின் வெண் சிறு கடுகு போன்ற சிறிய பூக்கள் மருத
மரத்தின் சிவந்து முதிர்ந்த மலர்களோடு தரையில் உதிர்ந்து
பரவிக் கிடந்து அவரது ஊரில் உள்ள நீர்த் துறையை அழகு செய்தன 
அவர் முன்பு தழுவிக் கூடிய எனது தோள்கள் முன்கையைக்
கடந்து ஒளி விளங்கும் வளையல்களை நெகிழ்ந்து விழும்படி மெலிந்து
தனிமைத் துன்பத்தையே தனது அழகாகப் பெற்றன


பாடலைப் பாடியவர் குன்றியனார்     

1 comment:

  1. ஞாழல் பூ வெண்சிறு கடுகு போலப் பூத்து, சிவந்த மருதம்பூ உதிர்ந்து பழம்பூவாய்க் கிடக்கும் பரப்பின் மேல் உதிரும் ஆற்றுத்துறையால் அழகு பெற்றிருக்கும் ஊருக்குத் தலைவர் அவர். ஆனால் அவரைத் தழுவிய என் தோள் வளையல் கழலும்படி துவண்டு தணிமையில் வாடுகிறது. (அவர் பரத்தையிடம் உள்ளார்)

    ReplyDelete