Sunday, January 21, 2018

குறுந்தொகை - பாடல் 59

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் 
அரலைக் குன்றத்   தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன் மறப்பரோ  மற்றே முயலவும்
சுரம்பல விலங்கிய  அரும்பொருள்
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே

பாடலின் பொருள் :

கிளைப் பறவையை இயக்கித் தாளத்தோடு வாசிக்கும் பரிசிலர்
தலைவனது அரலைஎனும் குன்றத்திலுள்ள அகன்ற
வாயை உடைய ஆழமான  சுனையில் பூத்த குவளை
மலர்களுடன் சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகைப்
பூக்கள் மணக்கும் நின் நறுமணமுடைய நெற்றியைத்
தலைவர் மறப்பாரோ ? மறக்க மாட்டார் . பல பாலை நில
மறப்பாரோ ? மறக்க மாட்டார் . பல பாலை நில
இடையிட்ட நாடுகளிற் சென்று தேடும் அரிய பொருட்செல்வங்கள்
எவ்வளவு முயன்றாலும் முற்ற முடியக் கிடைக்கப்பெறா
ஆகலின் இனியும் பொருள் தேடுவதற்காக கால நீட்டிப்பு
செய்யார் .விரைந்து திரும்புவார் .வருத்தத்தை  கைவிடு.


பாடலைப் பாடியவர் மோசிகீரனார்

1 comment:

  1. காதல், பிரிவு, கவலை எல்லாம் வாழ்வின் பகுதிகள். காலம் கடந்து வாழ்பவை. பிரிந்த தலைவனை எண்ணி வருந்தும் தலைவிக்குத் தோழி சொல்லும் ஆறுதல் இப்பாடல். உனக்குள்ள இந்த உணர்வு அவனுக்கும் உண்டு என்பதால் விரைந்து வந்துவிடுவான் என்கிறாள்.

    ReplyDelete