Sunday, January 21, 2018

குறுந்தொகை - பாடல் 52

ஆர்கலி மிதித்த நீர்திகழ் சிலம்பிற்  
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங்  கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லெனோ இறையிறை யானே

பாடலின் பொருள்

நாரத்தம் பூ மணக்கும் குவிந்து திரண்ட கரிய கூந்தலையும் 
வரிசையாய் விளங்கும் வெண் பல்லையும் உடைய இளம் பருவத்
தலைவியே வலிமை பொருந்திய ஆண் யானை மிதித்த பள்ளத்தில்
சிறிது நீர் கிடந்து விளங்கும் மலைமீது மகளிரால் விரும்பப் பட்டவன்
நீ நடுங்குவதைப் பார்த்து அவ்வப்போது சிறிது யான் பரிவுகொண்டு
இரக்கம் காட்டி வந்தேனல்லவா அதனால் யான் அறத்தொடு 
நின்றதன் பயனாகத் திருமணம் வந்தது என்று தோழி கூறுகிறாள்


பாடலைப் பாடியவர் பனம்பாரனார்

1 comment:

  1. தோழி தலைவியிடம் சொல்கிறாள் - அழகிய யானை மிதித்த சேறு போல அன்று நீ வதங்கினாய். உன் கூந்தலில் நரந்தத்தின் மணம் கமழ்ந்தது. என்னிடம் கெஞ்சுவது போல நீ அன்று உன் வெண்பல்லைக் காட்டினாய். அதனால் அன்று நான் இரக்கம் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தாயிடம் அறத்தொடு நின்றேன் அல்லவா?

    ReplyDelete