Sunday, January 21, 2018

குறுந்தொகை - பாடல் 54

யானே  ஈண்டை யேனே: யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி  தூண்டிலி னிவக்கும் 
கானக நாடனொ டாண் டொழிந்தன்றே

பாடலின் பொருள் :

யான் இங்கே தனிமையில் உள்ளேன் .எனது அழகு திணைப்
புனத்தைக் காப்பவரது கவண்கல் ஒலி கேட்டு அஞ்சிக் காட்டு
யானையானது தான் வளைத்த பசிய மூங்கிலைக் கைவிட ,அது மீன்
பிடித்த தூண்டில் மேலே எகிறித் தூக்கப் படுவது போல  
உயரத்தில் நிமிரும் கானக நடனாகிய தலைவருடன்
யான் பழகிய அவ்விடத்திலேயே ஒழிந்து போனது
பாடியவர் பெயர் பாடலில் வரும் உவமையை வைத்து

மீனெறி தூண்டிலார் என்று குறிப்பிடுகின்றன

2 comments:

  1. அழகிய உவமைகளால் ஆன பாடல் இது. யானை வளைக்கும்போது வளைந்து, விட்டவுடன் விலகி விடுகின்ற பசுந்தழை அன்று நான் என்பதைத் தலைவனுக்குத் தலைவி உரைக்கின்றாள். மீன் சிக்கியதும், உடனே நொடிப்பொழுதில் சுண்டி இழுத்துவிடும் நிலை போலத் தான் சிக்கிக் கொண்டோமோ என்றும் ஐயுறுகின்றாள்.

    ReplyDelete
  2. தலைமகள் தன் தோழியிடம் சொல்கிறாள் - நான் இங்குதான் இருக்கிறேன். என் நெஞ்சோ என் காதலன் கானக நாடனொடு அங்கே கிடந்தொழிக்கின்றது.

    காட்டு யானை மூங்கிலை வளைத்து மேய்ந்துகொண்டிருந்தது. தினைப்புனம் காக்கும் காவலர் கவணால் கல் எறிந்து அதனை ஓட்டினர். கவண்கல் பட்டு அந்த யானை தின்ன வளைத்த மூங்கிலை விட்டுவிட்டது. மூங்கில் யானையின் கையை விட்டுப் போய்விட்டது. அதுபோல என் நெஞ்சம் என்னை விட்டுப் போய்விட்டது.

    ReplyDelete