Saturday, April 28, 2018

குறுந்தொகை - பாடல் 251

மடவ வாழி - மஞ்ஞை மாஇனம்
கால மாரி பெய்தென ,அதன்எதிர் 
ஆலலும்ஆலின  பிடவும் பூத்தன ;
கார் அன்று - இகுளை-தீர்க நின் படரே !
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் ,
புதுநீர் கொளீ இய,உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே

பாடலின் பொருள்

தோழீ ! முன்னைய கார் காலத்துப் பெய்ய வேண்டிய மழையில் ,பெய்யாது தங்கிய பழைய நீரைக் கொட்டி விட்டுப் புதிய நீரைக் கடலில் முகப்பதற்காக ,இப்போது பெய்யும்தொடர் பற்ற காலத்து மழையின் முழங்கும் குரலைக் கேட்டு .மயில்களின் பெரிய கூட்டம் ,இதனைக் கார் கால மழையென்றே கருதி ,அம்முகிற் கூட்டத்திற்கு எதிரே மகிழ்ந்து ஆடுதலை மேற் கொண்டன .பிடவும் அவ்வாறே பூத்தன .அவை அறிவற்றன .இது உண்மையான கார்காலம் அன்று .உன் துன்பம் நீங்குவதாக !

இப்பாடலை எழுதியவர் இடைக்காடனார்  

No comments:

Post a Comment