Saturday, April 28, 2018

குறுந்தொகை - பாடல் 210

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த  வெண்ணெல் வெஞ்சோறு   
எழுகலத்து எந்தினும் சிறிது - என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக்  கரைந்த காக்கையது பலியே.

பாடலின் பொருள்
தலைவா! என் தோழியின் பருத்த தோலை நெகிழ்ச்சி செய்த பிரிவுத் துன்பத்திற்கு ,நல்நிமித்தமாகப் புதிய விருந்தினர் வருவர் என உணர்த்தக் கரைந்த காக்கையாலேயே, யான் தலைவியே
 'நீ வந்து விடுவாய்'' என ஆற்றுவித்தேன்.அதனால் அக் காக்கைக்குப் பலி உணவாக,திண்ணிய தேரையுடைய கண்டீரக் கோப்பெருநள்ளியின் காட்டிலுள்ள இடையர்கள் பல பசுக்கள் தந்த நெய்யுடன் ,தொண்டி நகரில் முழுவதுமாக விளைந்த வெண்ணெல் அனைத்தையும் கொண்டு சமைத்த சோற்றை ஏழுகலங்களில் ஏந்திக்கொடுத்தாலும் அது சிறிதேயாகும் !


இப்பாடலை எழுதியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்

No comments:

Post a Comment