Thursday, November 20, 2014

1. அறத்துப்பால் - அறிவன் சிறப்பு (கடவுள் வாழ்த்து )

நல்லூர் நெல்லைக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூர் .அந்த ஊரில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றவர் பாவலர் .அவர் வாலறிவர்; மக்கள் மனங்களில் பொருந்தியிருக்கும் சான்றோர்; வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்; ஐம்பொறிகளை அடக்கியவர் ; தனக்குவமை இல்லாதவர் ;அறக்கடலாக விளங்குபவர்; எண்ணிலடங்கா நல்ல பண்புகளை உடையவர் ;பிறவிப்பெருங்கடலைக் கடக்கத் துணையாக நிற்பவர்.
             
பாவலரின் நண்பர் நல்லதம்பி .அவருடை மனைவி மனோன்மணி .இருவரும் தங்கள் குடும்பத்தில் எந்த ஒரு சிக்கலாக  இருந்தாலும்,எந்த நிகழ்ச்சியாக  இருந்தாலும் பாவலரைக் கலந்து முடிவுகளை எடுப்பார்கள்.

நல்லதம்பியின் மூத்த மகள் தென்றல்.அவருடைய கணவர் அடல் .இப்போது இவர்களுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது .பாவலர் தமிழ்ப்பெயர் சூட்டும்படி அறிவுரை  கூறுகிறார் .அவ்வாறே கயல்விழி என்று பெயர் சூட்டப்படுகிறது.

நல்லதம்பியின் இளைய  மகன் பாவாணனுக்கு திருமணத்திற்குப்   பெண் பார்க்க  அருகில் உள்ள துரைப்பாக்கத்திற்கு  மகிழுந்தில் (காரில் )போகிறார்கள் .பாவலரும் உடன் செல்கிறார். .மகட்கொடை (வரதட்சனை) வாங்காமல் திருமணம் செய்ய அறிவுரை சொல்கிறார்.திருமணம் அவ்வாறே பேசி முடிக்கபடுக்கிறது .மணமகள் பெயர் அல்லி .பாவாணனும்   அல்லியும் பாவலரை விழுந்து வணங்கி  வாழ்த்துப் பெறுகிறார்கள் .அவரும் அவர்களை   மனமாற வாழ்த்துகிறார் .


தமிழ்நாட்டிலுள்ள  தொடக்கபள்ளி தொடங்கி தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று பாவலர் தலைமையில் உண்ணா நோன்புப்போராட்டம் நடைபெறுகிறது .நல்லதம்பியும் கலந்து கொள்கிறார் .இருவரும்  நெல்லையில் இருந்து திரும்புகிறார்கள் மகிழ்ச்சியோடு .

No comments:

Post a Comment