Thursday, November 20, 2014

4. அறன் சிறப்பு

“அழுக்காறு அவா  வெகுளி  இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் ."

தமிழாசிரியர் பொன்னம்பலம் மேற்கண்ட குறளுக்கு விளக்கம் சொல்கிறபோது , வள்ளுவர் பொறாமை , பேராசை , கொடுஞ்சினம் , கடும்சொல் நான்கும் விலக்கி வாழ்வதே அறம் என்று சொல்லிருப்பதைச் சுட்டிக்காட்டினர். அறிவியல் கோட்பாடுகளுக்கு வரையறை (definition) சொல்வதைப்போல் இருக்கிறது என்றார்.

.
அந்தப்பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன் இந்த  குறளுக்கு  எடுத்துக்காட்டாய் விளங்கும் அறச்செல்வர்  என்று கூறினார் .அழுக்காறு எனும் ஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் என்பதால் பொறாமையே இல்லாத வாழ்க்கை வாழ்கிறார்  தமிழ்ச்செல்வன்.பொறாமைப்படுகிறவர்கள்  தனக்குச் சமமாக உள்ளவர்களைப் பார்த்தோ அல்லது தனக்கு மேலே உள்ளவர்களைப்  பார்த்தோ பொறாமைப் படுவார்கள். தமிழ்ச்செல்வன்   இரண்டு வகையான பொறாமைகளும் இல்லாதவர்.அவர் எல்லோரிடமும் இயல்பாகப் பழகி நல்ல உறவை வைத்திருக்கிறார்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை என்பதால் தமிழ்ச்செல்வன் பேராசை அற்றவராக விளங்குகிறார்.பிறர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்.ஆசைகளற்ற நிலை பாராட்டுக்குரியது.

தமிழ்ச்செல்வன் சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லியையும் தவிர்த்தவர்.வீட்டில் மனைவி, பிள்ளைகளானாலும், பள்ளிக்கூடத்தில்  மாணவர்கள்,ஆசிரியர்களானாலும் சினம் கொள்ள மாட்டார். மற்றவர்களுக்குத்  தானே ஒரு எடுத்துக்காட்டாக  விளங்கி அவர்களைத்  திருத்துவார் சினம் கொள்ளமாட்டார்.
            
பயன் ஈன்று பண்பின் தலைப்ரியாச் சொல் நயன் ஈன்று நன்றி பயக்கும் என்பதால்  தமிழ்ச்செல்வன் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தவே மாட்டார் .வீடு,பள்ளிக்கூடம் என்பதல்ல,தெரியாத மூன்றாம் மனிதர்களிடம் கூட இனிய சொற்களையே பயன் படுத்தும் பண்பாளர் .

மாணவர்கள்,   தமிழ்ச்செல்வன் அழுக்காறு, அவா,  வெகுளி,  இன்னாச்சொல் நான்கும் தவிர்த்த  அறச்செல்வர் என்று உணர்ந்தனர்.



             

No comments:

Post a Comment