Tuesday, November 25, 2014

6. வாழ்க்கைத்துணைநலம்

"மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் .
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை ."

நல்லதம்பி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஓய்வுஊதியம் 25000 அளவில்தான் இருக்கும். வேறு வருமானம் கிடையாது. ஆனாலும் மனோன்மணி கணவருக்கு கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை சிறப்புற நடத்தும் பெண்மணி ஆவார்.

நல்லதம்பி பணியில் இருக்கும்போதே உண்பதிலும் உடுப்பதிலும் எளிமை கடைப்பிடித்தார், மனோன்மணி. பாவாணன், தென்றல் இருவரையும் அதற்குப் பழக்கப்படுத்தினார். அதே நேரத்தில் கருமித்தனம் கிடையாது. தேவையான செலவுகள் போக மீதமிருக்கும் பணத்தை தன்னிடத்தில் இருக்கும் சிறிய பேழையில் (safe) போட்டுவைப்பார். மாதமுடிவில் அந்தத் தொகையை எடுத்து வங்கியில் முறைவைப்புத்திட்டத்தில் (recurring deposit) போட்டுவிடுவார். அந்தப் பணம் 2 அல்லது 3 ஆண்டுகளில் முதிர்வடையும்போது அதை எடுத்து குறித்தகால வைப்புத்திட்டத்தில் (fixed deposit) போடுவார். இப்படிச் சேர்ந்த பணம் பிள்ளைகளின் கல்வி , திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பயன் பட்டது. பாவாணன் அறிவியல் படித்தான். தென்றல் நல்ல மதிப்பெண் பெற்று  அரசு ஒதுக்ககீட்டில் இடம் பிடித்துப் பொறியாளர் ஆனாள். அடலைக் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் எளிமையாக நடந்தது.

அது மட்டும் அல்ல நல்லதம்பி பணியில் இருக்கும்போதே வீடுகட்டுவதற்கு கடன் பெற்று  அதை கட்டி முடித்துவிடும்படி அறிவுரை சொன்னார். அதனால் ஓய்வு பெற்ற பின் வாடகை கொடுக்கும் நிலை  இல்லை.                                                                                       
 நல்லதம்பி அவர் குடும்பத்தில் மூத்த பிள்ளை .மனோன்மணி மாமன் , மாமியைத் தன் பெற்றோரைப் போல் பார்த்துக்கொள்வார்.நல்லதம்பிக்கு இரு தங்கைகளும் உண்டு.சிக்கனம் என்கிற பெயரில் நாத்தனார்களுக்குச்
சீர் செய்வதில் குறை வைக்க மாட்டார்.அதே போல் விருந்தோம்பலிலும்  குறை கிடையாது.நண்பர்கள், உறவினர்கள் எல்லோரையும் விருந்தோம்புவார் .

மனோன்மணி கணவனின் வருமானத்துக்குள் குடும்பத்தைச் சிறப்புற நடத்துகிறார் என்ற பாவலரின் கருத்து சரியானதே மனைத்தக்க மாண்புடையவர்  ஆகிறார் மனோன்மணி .  

No comments:

Post a Comment