Friday, November 21, 2014

5. இல்வாழ்க்கை

" இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
  நல்லாற்றின் நின்ற துணை ."

மணிவண்ணன் நெல்லை  மாநகரில் துணிக்கடை நடத்திவரும் ஒரு வணிகர். அவருடைய கடையில் பத்துப்பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுப்பதால் அவர்கள் அடிக்கடி கடைமாறிச் செல்வதில்லை . வருவாயைக் கணக்கிட்டு வருமான வரி கட்டிவிடும் நேர்மையாளர். புத்தாண்டு , பொங்கல் போன்ற விழாக்காலங்களில் தள்ளுபடி கொடுப்பதால் கூடுதல் விற்பனை கிடைக்கும் .

அவருடைய பெற்றோர் இருவரிடமும் பேரன்பு உடையவர் . அவர்கள் விரும்புவதைத் தக்க நேரத்தில் வாங்கிக் கொடுப்பார் . முகம் கோணாமல் நடந்து கொள்வார். முதுமை கரணியமாக ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தீர்வு காண்பார்.


மணிவண்ணனின் துணைவியார் வள்ளியம்மை வள்ளுவர் கூறியதைப் போன்ற மனைமாட்சி உடையவர்.வள்ளியம்மை எளிமையானவர்.நகைகளை அதிகமாக அணிய மாட்டார்.உலக அறிவு பெற வேண்டும் என்பதற்காக சமூக ,அரசியல் கூட்டங்களுக்குப் போவார். மணிவண்ணன் அவரை அவ்வப்போது திரைப்படங்களுக்கும் அழைத்துச் செல்வார்.வள்ளியம்மை மாமன், மாமியைத் தன் பெற்றோரைப் போலப் பார்த்துக்கொள்வார். மணிவண்ணன் இணையர் (தம்பதி) வள்ளியம்மையின் பெற்றோரையும் நலம் பேணி வருவர்.

மணிவண்ணன் இணையருக்கு ஒரு மகனும் ஒரு மகளும்.பிள்ளைகள் இருவரிடத்திலும் மணிவண்ணன் நண்பனைப்போல பழகுவார்.கடிதோச்சி மெல்ல எறிவதாக அவருடைய வளர்ப்பு இருக்கும்.நாள்தோறும் அவர்களை ஓகப்(யோகா)பயிற்சி செய்யச்சொல்வார்.தந்தை சொற்படி நடந்து உண்ணுவதிலும் உடுத்துவதிலும் எளிமை காட்டுவர்.பெற்றோர் பார்க்கும் சமூக ,அரசியல் நிகழ்ச்சிகளையே மிகுதியாகப் பார்ப்பார்கள்.பெற்றோர் விருப்பப்படி அவையத்து முந்தியிருக்கும் பிள்ளைகள் அவர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் பாவலர் நடத்தும் திருக்குறள் வகுப்புக்குச் சென்று  தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்கின்றனர் .

மணிவண்ணன் பெற்றோர், மனைவி, பிள்ளைகள் என்ற இயல்புடைய மூவர்கும் துணையகிறார் .            

    

No comments:

Post a Comment